தெலுங்கு ஹீரோக்களை துரத்தும் நிக்கி கல்ராணி!

Bookmark and Share

தெலுங்கு ஹீரோக்களை துரத்தும் நிக்கி கல்ராணி!

தமிழில் ஆதி நடித்துள்ள யாகவராயினும் நா காக்க படத்தில்தான் முதன்முதலாக நடித்தார் நிக்கி கல்ராணி. ஆனால் அதையடுத்து அவர் நடித்த டார்லிங் படம் வெளியாகி அதுவே அவருக்கு முதல் படமாகி விட்டது. இந்நிலையில், ஆதியுடன் அவர் நடித்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.

இந்த நிலையில், தமிழில் கோ-2 என்ற படத்தில் கமிட்டாகியிருக்கும் நிக்கி கல்ராணி, மலையாளம், கன்னட படங்களில் அதிகமாக நடித்து வந்தபோதும் தற்போது தெலுங்கில் முழுவீச்சில் இறங்கியிருக்கிறார். அங்குள்ள முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க முயற்சி செய்துவந்த நிக்கி கல்ராணிக்கு எதிர்பார்த்தபடி படவாய்ப்பு அமையவில்லை.

அதனால், தற்போது சுனில் என்ற காமெடி ஹீரோவுக்கு ஜோடியாகி விட்டார். சுனில் நடித்துவரும் சில படங்கள் ஆந்திராவில் ஹிட்டடித்து வருவதால் தமிழைப்போலவே தெலுங்கிலும் முதல் படம் ஹிட்டாக அமைந்தால் ராசியான நடிகையாகி விடலாம் என்று அந்த படத்தில் கமிட்டாகியிருக்கும் நிக்கி கல்ராணி, ஐதராபாத்தில் முகாமிட்டபடி, ராம்சரண்தேஜா, நாக சைதன்யா போன்ற இளவட்ட நடிகர்களின் படங்களுக்காக கல்லெறிந்து வருகிறார்.


Post your comment





Related News
கவர்ச்சி உடை, பிகினி அணிந்து உடலை காட்டுவது தவறில்லை - பிரபல சின்னத்திரை நாயகி ஓபன் டாக்.!
சக்தி வாசுவுக்கு ஜோடியான பிரிட்டிஷ் இந்திய அழகி
அரசியல்வாதியின் மகனை திருமணம் செய்யும் சரோஜா நடிகை
கோ 2 வசூல் விவரம் வெளியானது!
ஏப்ரல் 4 முதல் ‘கோ 2’ பிரச்சாரம் தொடங்கவுள்ளது!
நடிகராகும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்
மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் நிகிதா..!
தமிழை கடித்து குதறும் நிகிஷாபட்டேல்!
3 மொழிகளில் பிசியாகிவிட்டார் நிக்கி கல்ராணி
விஷாலுடன் குத்தாட்டம் போடும் நிகிதா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions