சக்தி வாசுவுக்கு ஜோடியான பிரிட்டிஷ் இந்திய அழகி

Bookmark and Share

சக்தி வாசுவுக்கு ஜோடியான பிரிட்டிஷ் இந்திய அழகி

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பிரிட்டிஷ் இந்திய அழகி நிகிஷா படேல். பல பி.பி.சி. ஷோக்களில் தன் திறமையால் அசத்திய நிகிஷா படேல், `புலி' என்ற தெலுங்கு படத்தின் மூலமாக இந்திய சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து கன்னடத்திலும் நடித்தார்.

`தலைவன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர், `என்னமோ ஏதோ' நகுல் உடன் `நாரதன்' படங்களில் நடித்தார். இப்போது, இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்திவேல் வாசுவின் `7 நாட்கள்' படத்தில் நடித்து வருகிறார். மில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கௌதம்.வி.ஆர். இயக்கி வரும் இப்படத்தில் பிரபு, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். 

விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமத்துள்ளார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு  செய்துள்ளார். மதன் கார்க்கியின் வரிகளில், டி.ராஜேந்தர் பாடிய பாடலான 'புடிச்சிருக்க பெண்ணே சொல்லிபுடு' என்ற பாடல் பிப்ரவரியில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. 

இது தவிர தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் `குண்டூர் டாக்கீஸ் 2', `100 டிகிரி செல்சியஸ்' படங்களிலும் நிகிஷா பட்டேல் நடித்து வருகிறார். வேறு சில படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளன.


Post your comment





Related News
மெர்சல் கர்நாடகா மொத்த வசூலும் வெளிவந்தது- இத்தனை கோடிகளா?
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!
என்னது நம்ம ரம்யாவா இது- ஒரு படத்துக்காக இப்படி மாறிட்டாரே?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே
அஜித்திற்காக BGM அமைக்க விரும்பும் பிரபல இசையமைப்பாளர்.!
விஜய், சிம்புவுடன் நடித்த நடிகை இப்போது!! அவரா இப்படி - ஷாக்கிங் போட்டோ
மெர்சல் படத்திற்காக மெட்ராஸ் ஐஐடி'யில் குவிந்த கூட்டம்
தெலுங்கு மெர்சலுக்கு இப்படியொரு நிலைமையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா தல அஜித்? - குஷியில் ரசிகர்கள்.!
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions