விஷாலுடன் குத்தாட்டம் போடும் நிகிதா

Bookmark and Share

விஷாலுடன் குத்தாட்டம் போடும் நிகிதா

தமிழில் ‘குறும்பு’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிகிதா. இப்படத்திற்கு பிறகு ‘சத்ரபதி’, ‘வெற்றிவேல் சக்திவேல்’ ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில் வெங்கட் பிரபு இயக்கிய ‘சரோஜா’ படத்தில் ‘கோடான கோடி...’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

நீண்ட காலமாக கன்னட மொழிப் படங்களில் பிசியாக நடித்து வந்த நிகிதா தற்போது தமிழில் மீண்டும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடிவுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் விஷால்-காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வரும் படம் ‘பாயும் புலி படத்தில் விஷாலுடன் இணைந்து ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார்.

இமான் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு சென்னை பின்னி மில்லியில் மார்க்கெட் போன்று செட் அமைத்து பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்கள். இப்பாடலும் ‘கோடான கோடி...’ பாடல் போல் அதிகம் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions