விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கும் நிக்கி கல்ராணி?

Bookmark and Share

விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கும் நிக்கி கல்ராணி?

‘டார்லிங்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ‘நிக்கி கல்ராணி’. இப்படத்தில் நிக்கி பேயாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இப்படம் வெற்றிபெறவே நிக்கிக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் இவர் ஆதியுடன் இணைந்து நடித்த ‘யாகாவாராயினும் நாகாக்க’ படம் வெளியானது. இதுதவிர, பாபி சிம்ஹாவுடன் இணைந்து ‘கோ 2’ படத்திலும் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘கவலை வேண்டாம்’ படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘இன்று நேற்று நாளை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு தற்போது எழில் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். எழில் ஏற்கனவே ‘தேசிங்கு ராஜா’, ‘வெள்ளக்காரதுரை’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்த புதிய படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்திற்கு ஒரு பெண்ணை தேடியதாகவும், அந்த கதாபாத்திரத்திற்கு நிக்கி கல்ராணி பொருத்தமாக இருப்பார் என்று நிக்கியை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்க இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த முழுவிவரங்களை படக்குழுவினர் வெளியிட இருக்கின்றனர்.


Post your comment





Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
பிரபுதேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions