ரெண்டு திருடர்களின் ரயில் பயணத்தில் சிக்கிய நிக்கி கல்ராணி..!

Bookmark and Share

ரெண்டு திருடர்களின் ரயில் பயணத்தில் சிக்கிய நிக்கி கல்ராணி..!

மலையாள இளம் நடிகரும், நடிப்பைவிட படங்களை இயக்கி சாதித்தவருமான வினீத் சீனிவாசன் தற்போது நடித்துவரும் படம் தான் 'ஒரு செகண்ட்கிளாஸ் யாத்ரா'.

இரட்டை இயக்குனர்களாக அறிமுகமாகும் ஜெய்சன் ஆண்டனி மற்றும் ரெஜிஸ் ஆண்டனி இருவரும் இயக்கும் இந்தப்படத்தில், சமீபத்தில் தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்த டார்லிங் நிக்கி கல்ராணி தான் கதாநாயகியாக நடிக்கிறார்.

வினீத் சீனிவாசனும் அவரது கூட்டாளியான செம்பான் வினோத்தும் பக்கா திருடர்கள்.. ஒரு திருட்டு கேசில் சிக்கிய இருவரும் கண்ணூர் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்கள்.. பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் ஜெயிலுக்கு அவர்களை மாற்றச்சொல்லி உத்தரவு வருகிறது.

இதற்காக இரண்டு போலீசார்கள் இவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு பரசுராம் எக்ஸ்பிரஸில் செகன்ட் கிளாசில் பயணிக்கிறார்கள்.. இந்தப்பயணத்தின்போது கூடவே பயணிக்கிறார் நிக்கி கல்ராணி.. இந்த ஐவருக்கும் இடையே நடக்கும் கலாட்டாக்கள் தான் மொத்த கதையும்.. அந்தவகையில் காமெடி கலந்த த்ரில்லராக படம் உருவாகி வருகிறதாம்.


Post your comment





Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
பிரபுதேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions