பேய் படத்தில் நடித்தவர்கள் பேயை பார்த்தார்களா? நிக்கி கல்ராணி

Bookmark and Share

பேய் படத்தில் நடித்தவர்கள் பேயை பார்த்தார்களா? நிக்கி கல்ராணி

கோலிவுட்டில் பேய் படங்கள் சீசன் நடக்கிறது. ஏற்கனவே பேய் படம் எடுத்தவர்கள், நடித்தவர்களின் அனுபவம் எப்படி என்றதற்கு பதில் அளித்தனர். காமெடி படங்களாக இயக்கிக்கொண்டிருந்த சுந்தர்.சி திடீரென்று அரண்மனை என்ற பெயரில் பேய் படம் இயக்கினார். ஆண்ட்ரியா, ஹன்சிகா பேய்களாக நடித்தனர். இப்படத்தின்போது இயக்குனருக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி கூறும்போது,’குழந்தை ஒன்று சுவர் அருகில் அமர்ந்து பேசுவதுபோல் காட்சி படமாக்கிக்கொண்டிருந்தோம். அதை சைலன்ட் காட்சியமாக படமாக்கினேன். எடிட்டிங் செய்துபார்த்தபோது யாரோ மூச்சுவிடுவதுபோன்ற சத்தம் இருளான பகுதியிலிருந்து வருவதுபோல் ஒலித்தது. அந்த சத்தம் எங்களை திடுக்கிட வைத்தது’ என்றார்.

அருள்நிதி நடித்த ‘டிமான்டி காலனி’ பட இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியது: இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே சென்னையில் உள்ள டிமான்டி காலனி பகுதிக்கு நள்ளிரவில் நண்பர்களுடன் சென்றேன். மழையும் மின்னலுமாகஇருந்தது. காரிலிருந்து நண்பர்கள் இறங்க முயன்றபோது அவர்களை தடுத்தேன். ஏதோ வித்தியாசமாக அங்கு நடப்பதுபோல் இருந்தது. உடனே அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம். வீடு திரும்பியபிறகுகூட பின்பக்கமாக யாரோ நிற்பதுபோன்ற உணர்வு இருந்தது. அதேநேரம் தெரு முனையிலிருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இரவு முழுவதும் கரண்ட் இல்லை. யாருமே தூங்காமல் விடிய விடிய விழித்திருந்தோம்’ என்றார்.

டார்லிங் படத்தில் நடித்த நிக்கி கல்ராணி: ஆன்லைனில் பேய் நடமாடும் இடம்பற்றி படித்தேன். குறிப்பிட்ட இடத்துக்கு சென்றபோது அந்த இடமே அமைதியாக இருந்தது. குளிர் அதிகமாவதுபோல் தெரிந்தது. அத்துடன் மண்டை ஓடுபோன்ற ஒரு பொருள் என் கண்ணுக்கு தெரிந்தது. உடனே அங்கிருந்து தோழிகளுடன் வெளியேறிவிட்டேன்.

நடிகர் அர்ஜுன் கூறும்போது, ‘கடவுள் நம்பிக்கையும், பேய் நம்பிக்கையும் உள்ளது. படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று ஓட்டலில் தங்கியபோது கெட்ட கனவுகள் நிறைய வந்தது. யாரோ நடமாடுவதுபோன்ற சத்தம் கேட்டது. இதையெல்லாம் என்னால் உணர முடிந்தது. பிறகு விசாரித்தபோது நான் தங்கி இருந்த ஓட்டலில் யாரோ தற்கொலை செய்துகொண்டதாக கூறினார்கள்’ என்றார். 


Post your comment





Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
பிரபுதேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions