
கடந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே பளீரென்ற புகழ் வெளிச்ச வளையத்திற்குள் வந்துவிட்டார் நிக்கி கல்ராணி. பூர்வீகம் கன்னடம் என்றாலும் தமிழும் மலையாளமும் தான் அவருக்கு மகுடம் சூட்டி ராணியாக அழகு பார்க்கின்றன.
கிராமத்து படமாக இருந்தாலும் சிட்டி சப்ஜெக்ட்டாக இருந்தாலும் நிக்கி இதுவரை நடித்த படங்களில் எல்லாம் மாடர்ன் கேர்ள் ஆகவே நடித்து வந்திருக்கிறார். நல்லவேளையாக லட்சுமி மேனன் போல ஆரம்பத்திலேயே கிராமத்து கேரக்டர்களில் சிக்கிக்கொண்டு அவதிப்படவில்லை.
ஆனால் இப்போது முதன்முறையாக 'ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா' என்கிற படத்தில் பாவாடை தாவணி அணிந்து பக்கா கிராமத்துப்பெண்ணாக நடித்திருக்கிறார்.
இரட்டை இயக்குனர்களாக அறிமுகமாகும் ஜெய்சன் ஆண்டனி மற்றும் ரெஜிஸ் ஆண்டனி இருவரும் இயக்கும் இந்தப்படத்தில் வினீத் சீனிவாசனும் அவரது கூட்டாளியான செம்பான் வினோத்தும் ஜெயில் கைதிகளாக நடிக்கிறார்கள்.
அவர்களை திருவனந்தபுரம் ஜெயிலுக்கு ட்ரெய்னில் அழைத்து செல்லும்போது, இந்தப்பயணத்தில் கூடவே பயணிக்கிறாராம் நிக்கி கல்ராணி. அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை அழகான திரைக்கதையாக மாற்றியுள்ளார்களாம் இந்த இரட்டை இயக்குனர்கள்.
Post your comment