நிக்கி கல்ராணிக்கு டார்லிங் கொடுத்த திருப்பம்!

Bookmark and Share

நிக்கி கல்ராணிக்கு டார்லிங் கொடுத்த திருப்பம்!

தமிழில் டார்லிங் படத்தில் நடிப்பதற்கு முன்பு மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்  நிக்கி கல்ராணி. அதேபோல் தமிழிலும் ஆதி நடித்த யாகவராயினும் நா காக்க என்ற படத்தில் நடித்தார்.

அப்படி அவர் நடித்த எல்லா படங்களுமே மார்க்கெட் இல்லாத ஹீரோக்களின் படங்களாகத்தான் இருந்தது. ஆனால், டார்லிங் படம் ஹிட்டானதால் இப்போது மலையாளத்தில் மம்மூட்டி, ப்ருதிவிராஜ் என முன்னணி ஹீரோக்களின் படங்கள் நிக்கியின் பாக்கெட்டில் எகிறி குதித்துள்ளன.

இந்த ஹீரோக்களுடன் எப்படியேனும் நடித்து விட வேண்டும் என்று ஒருகாலத்தில் அவர் எடுத்த முயற்சிகள் எல்லாமே தோல்வியில்தான் முடிந்ததாம்.

ஆனால், இப்போது அவர் முயற்சி செய்யாமலேயே இந்த பெரிய ஹீரோக்களின் படங்கள் கிடைத்திருப்பதோடு நிக்கி கல்ராணியின் படக்கூலியும் எகிறி விட்டதாம். அதனால் தற்போது மலையாளத்தில் குறிப்பிடத்தக்க நடிகையாக வளர்ந்து நிற்கிறார்.

அதேசமயம், தமிழில் கிடைத்த இடத்தையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக தற்போது கோ-2 படத்தில் கமிட்டாகியிருக்கும் நிக்கி கல்ராணி, அடுத்தபடியாக  தமிழிலும்  முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்ற வேண்டும் என்று தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார் நிக்கி.


Post your comment





Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
பிரபுதேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions