ஆதியின் நம்பிக்கை நட்சத்திரமான நிக்கி கல்ராணி!

Bookmark and Share

ஆதியின் நம்பிக்கை நட்சத்திரமான நிக்கி கல்ராணி!

மிருகம், ஈரம், அய்யனார் படங்களில் நடித்தபோது படிப்படியாக வளர்ந்து கொண்டிருந்த ஆதி, வசந்தபாலன் இயக்கத்தில் நடித்த அரவான் படம் தனது மார்க்கெட்டை ரொம்ப உசரத்துக்கு கொண்டு போகப்போகிறது என்று நம்பி நடித்தார்.

ஆனால் அந்த படமோ அவரை உசரத்துக்கு தூக்கி கொண்டு போய் கீழே போட்டு விட்டது. அதனால் கோச்சடையான், வல்லினம் உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த ஆதி, யாகவராயினும் நாகாக்க படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்தார்.

ஒரு தவறான வார்த்தை எவ்வளவு பெரிய பிரச்னையை உண்டாக்கி விடுகிறது என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ஆனால், பல மாதங்களுக்கு முன்பே இப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டபோதும், எதிர்பார்த்தபடி வியாபாரமாகவில்லை.

அதனால் தடுமாறிக்கொண்டு வந்தார் ஆதி. அந்த நேரம்பார்த்து அவரது பட நாயகியான நிக்கி கல்ராணி நடித்த டார்லிங் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விளைவு, இப்போது அவரது பெயரை முன்வைத்தே படத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டார் ஆதி.

நிக்கி கல்ராணியை இந்த படத்துக்கு புக் பண்ணியபோது தெலுங்கில் இவர் பெயரை வைத்து படத்தை விற்பனை செய்யலாம் என்று நினைத்திருந்த ஆதியை, இப்போது தமிழுக்கும் அவரே கைகொடுத்து காப்பாற்றியிருக்கிறார்.

அதோடு, நிக்கி கல்ராணிக்காகவே தியேட்டருக்கு ரசிகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையும் இப்போது ஆதிக்கு ஏற்பட்டு, அவரது நம்பிக்கை நட்சத்திரமாகியிருக்கிறார் நிக்கி கல்ராணி.


Post your comment





Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
பிரபுதேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions