முன்னணி நாயகியாக மாறும் நிக்கி கல்ராணி!

Bookmark and Share

முன்னணி நாயகியாக மாறும் நிக்கி கல்ராணி!

‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து ‘யாகாவராயினும் நாகாக்க’, ‘கோ–2’ படங்களில் நடித்தார். இப்போது வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து நிக்கி கல்ராணியும் தமிழ் பட நாயகிகளில் முக்கியமானவராக மாறி வருகிறார்.

இப்போது, வளர்ந்து வரும் பிரபல நாயகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு இவரைத் தேடி வருகின்றன. கவர்ச்சியுடன், தமிழும் பேசத் தெரிந்தவராக இருப்பதால் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு நிக்கி கல்ராணியை இயக்குனர்கள் அணுகுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இப்போது ராகவா லாரன்சுடன் ‘மொட்டசிவா கெட்டசிவா’ ஜி.வி. பிரகாசுடன் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஜீவாவுடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

விக்ரம் பிரபுவுடனும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இன்னும் சில படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதனால் நிக்கி கல்ராணி தமிழ் பட உலகில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். சம்பளத்தையும் உயர்த்திவிட்டார் என்று என்று கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
பிரபுதேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions