கேரக்டருக்காக வெயிட் கூட்டிய 'டார்லிங்' நிக்கி..!

Bookmark and Share

கேரக்டருக்காக வெயிட் கூட்டிய 'டார்லிங்' நிக்கி..!

கேரளாவை பொறுத்தவரை மிக வசதியான அரண்மனை போன்ற வீட்டில் உள்ள பெண்களை 'தம்புராட்டி' என அழைப்பது வழக்கம்.. இப்போது அப்படி ஒரு 'ஹேமா தம்புராட்டி' யாக மாறியிருக்கிறார் நம்ம 'டார்லிங்' நிக்கி கல்ராணி.. இது மலையாளத்தில் அவர் தற்போது நடிக்கும் 'ருத்ர சிம்ஹாசனம்' படத்திற்காக ஏற்றிருக்கும் கேரக்டர் தான்.. சுரேஷ்கோபி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை சிபு கங்காதரன் என்பவர் இயக்குகிறார்.

இருப்பினும் இது ஒரு ஹீரோயினுக்கு வெயிட் கொடுக்கக்கூடிய சப்ஜெக்ட்டாக உருவாவதாலோ என்னவோ, நிக்கியின் கேரக்டருக்காக அவரது எடையை கொஞ்சம் கூட்ட சொன்னாராம் இயக்குனர்.. நிக்கியும் என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை.. கொஞ்ச நாளில் பூசின மாதிரி வந்து நின்றாராம்.

ஆனால் எவ்வளவு எடை கூடியிருக்கிறோம் என்பதை செக் பண்ண, நிக்கிக்கு விருப்பம் இல்லையாம்.. அது தெரிந்தால் பயம் வந்துவிடுமாம். அதேபோல நிக்கி நடித்த '1983' படம் போலவே, இதிலும் துளிகூட கவர்ச்சிக்கு வேலை வைக்காத கேரக்டராம்.

அதனால் படம் முழுக்க  தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு, அதிலும் பிளைன் காட்டன்  புடவை கட்டிக்கொண்டுதான் நடித்திருக்கிறாராம்.


Post your comment





Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
பிரபுதேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions