ஹரஹர மஹாதேவகி படத்தில் நடித்தது ஏன்? - நிக்கி கல்ராணி பதில்

Bookmark and Share

ஹரஹர மஹாதேவகி படத்தில் நடித்தது ஏன்? - நிக்கி கல்ராணி பதில்

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் மற்றும் தங்கம் சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'ஹர ஹர மஹாதேவகி'. சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ், பால சரவணன், ராஜேந்திரன், கருணாகரன், மனோபாலா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பாலமுரளி இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர்-29ல் வெளியாகிறது.

இப்படம் குறித்து நிக்கி கல்ராணி கூறியிருப்பதாவது:

என்னுடைய எல்லா படத்தையும் போல இதுவும் நல்ல படம் தான். இந்த படத்தை பற்றி ஏன் அதிக பேச்சு வருகிறது என்றால் இந்த படம் ஒரு “அடல்ட் காமெடி“ படம். இந்த படத்தை மக்களுக்கான ஒரு பொழுதுபோக்கு படமாக தான் நாங்கள் பார்க்கிறோம்.

இந்த படத்தில் நாங்கள் வேண்டுமென்றே டபுள் மீனிங் வசனங்கள் எதையும் வைக்கவில்லை. படத்தில் டபுள் மீனிங் வசனங்கள் சந்தர்ப்ப சூழ்நிலையில் வருவது போல் தான் இருக்கும். இந்த படத்தின் கதையை கேட்டு எனக்கு கதை பிடித்திருந்ததால் தான் நடித்தேன்.

இந்த படத்தில் யாரையும் தப்பாக காட்டுவது போல் காட்சிகள் இல்லை. வல்காரிட்டி இல்லாமல் இந்த படத்தை நாங்கள் எடுத்துள்ளோம். நாங்கள் படத்தை கூட அடல்ட் காமெடி என்று தான் ப்ரொமோட் செய்கிறோம். நான் ஸ்வீட் பப்ளி காலேஜ் பெண்ணாக நடித்துள்ளேன்.

என்னை தப்பாக காட்டும் ஒரு படத்தில் நானே நடிக்க மாட்டேன். இந்த படத்தில் அப்படிபட்ட காட்சிகள் ஏதும் இல்லை. இந்த படத்தில் தேவையில்லாமல் அடல்ட் காமெடி எதுவும் இல்லை. இவ்வாறு நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions