படப்பிடிப்பில் உயிர்தப்பிய ஜி.வி.பிரகாஷ் - நிக்கி கல்ராணி

Bookmark and Share

படப்பிடிப்பில் உயிர்தப்பிய ஜி.வி.பிரகாஷ் - நிக்கி கல்ராணி

அம்மா கிரியே‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரித்து ஜி.வி.பிரகாஷ் ஆனந்தி, நிக்கி கல்ராணி நடித்திருக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. ராஜேஷ். எம் இதை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

இதில் தயாரிப்பாளர் அம்மா கிரியே‌ஷன்ஸ் டி.சிவா பேசும் போது, “அம்மா கிரியே‌ஷன்ஸ் நிறுவனம் தொடங்கி 25 வருடம் ஆகிறது. இந்த 25 வருடத்தில் நான் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து விட்டேன். ‘கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படத்தை தயாரித்து இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் 100 சதவீதம் மிகச்சிறந்த நடிகர். நிக்கி கல்ராணியின் டைமிங் மற்றும் நடிப்பு மிக அருமையாக இருக்கும். ஆனந்தி குழந்தை போன்றவர். நிச்சயம் அவர் சினிமாவில் மிகப்பெரிய உயரங்களை தொடவேண்டும்” என்றார்.

இயக்குநர் ராஜேஷ், “ஜி.வி. பிரகாஷ் நடிப்பை ‘திரிஷா இல்லைனா நயன்தாரா’ திரைப்படத்தில் பார்த்து இந்த கதையில் அவர் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்த படம் அனைவரும் வந்து பார்க்கும் ஒரு படைப்பாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் நடித்து ‘யு’ சான்றிதழ் பெற்று வெளிவரும் முதல் திரைப்படம் இது” என்று கூறினார்.
ஜி.வி.பிரகாஷ் குமார், “இந்த படத்தில் ஆனந்தி மிகவும் அமைதியான பெண். நிக்கி கல்ராணி ரவுடி பொண்ணு.

இந்த படத்திற்காக கார் சேசிங் காட்சி படமானது. நானும், நிக்கி கல்ராணியும் சென்ற கார் மீது துரத்தி வந்த கார் மோதியது. அப்போது எங்கள் கார் உருண்டது. நல்ல வேளையாக இருவரும் உயிர் தப்பினோம். நான் என்னுடைய வாழ்நாளில் வேலை செய்த மிகச்சிறந்த டீம் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் டீம் தான். சென்சார் குழுவினர் படம் பற்றி நல்லவிதமாக என்னிடம் கூறினார்கள். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions