'கவலை வேண்டாம்' படத்தில் இரண்டு கதநாயகிகள்...!

Bookmark and Share

'கவலை வேண்டாம்' படத்தில் இரண்டு கதநாயகிகள்...!

ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்த 'யான்' படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. எனவே யான் படத்திற்குப் பிறகு ஜீவாவுக்கு புதிய படம் எதுவும் 'கமிட்' டாகவில்லை.

அதனால் அப்செட்டில் இருந்த ஜீவா, சூப்பர்குட் பிலிம்ஸில் மானேஜராக உள்ள செந்திலை தயாரிப்பாளர் என்று அறிவித்து தானே ஒரு படத்தையும் தயாரிக்க ஆரம்பித்தார்.

அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்குள்  ’கவலை வேண்டாம்’ என்ற படம் கமிட்டானது. ’யாமிருக்க பயமே’ படத்தின் இயக்குனர் டீகே இயக்கும் இப்படத்தை ’ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட்’ எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

யான் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இப்படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கிறார் ஜீவா. ’இது என்ன மாயம்’, ’ரஜினி முருகன்’ படங்களின் நாயகி கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.  

இப்போது இன்னொரு நாயகியாக நிக்கி கல்ராணியும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இவர்  ’டார்லிங்’ படத்தின் நாயகி.  நிக்கியும், கீர்த்தியும் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருக்கின்றனர்.

எனவே அவர்களின் கால்ஷீட்டை வாங்கிய பிறகு  கவலை வேண்டாம் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ’கவலை வேண்டாம்’ படத்தில்  ஜீவா உடன் இன்னொரு ஹீரோவாக பாபி சிம்ஹா நடிக்கிறாராம்.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions