மொட்ட சிவா கெட்ட சிவா படத்தால் பின்வாங்கிய படங்கள்

Bookmark and Share

மொட்ட சிவா கெட்ட சிவா படத்தால் பின்வாங்கிய படங்கள்

நட்டி நடராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எங்கிட்ட மோதாதே’, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘புரூஸ்லீ’ ஆகிய படங்கள் வரும் மார்ச் 10-ந் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். கடந்த ஒருவார காலமாக இப்படம் குறிப்பிட்ட தேதியிலேயே வெளியாகும் என்று விளம்பரமும் செய்து வந்தனர்.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி வருகிற மார்ச் 9-ந் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் ‘எங்கிட்ட மோதாதே’, ‘புரூஸ்லீ’ படங்களின் ரிலீஸ் தேதியை தற்போது ஒத்திவைத்துள்ளனர்.

அதன்படி, ‘எங்கிட்ட மோதாதே’ படத்தை வரும் மார்ச் 24-ந் தேதிக்கும், ‘புரூஸ்லீ’ படத்தை வருகிற மார்ச் 17-ந் தேதிக்கும் ஒத்திவைத்துள்ளனர். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகபடியான திரையரங்குகள் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கே கிடைக்கும் என தெரிகிறது. எனவே, மேற்சொன்ன இரண்டு படங்களுக்கும் திரையரங்குகளின் எண்ணிக்கைகள் குறைவாக கிடைக்கும என்பதாலேயே தள்ளிப்போனதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

இருப்பினும், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தோடு சந்திப் கிஷன், ஸ்ரீ நடிப்பில் உருவாகியிருக்கிற ‘மாநகரம்’ தைரியமாக போட்டியிட களத்தில் இறங்கியுள்ளது. மேலும், ‘நிசப்தம்’ என்றொரு படமும் மார்ச் 10-ந் தேதி வெளியாகவிருக்கிறது. 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions