இளம் நாயகன் நிகிலின் அடுத்த படம்

Bookmark and Share

இளம் நாயகன் நிகிலின் அடுத்த படம்

சுவாமி ர ர, கார்த்திகேயா, சூரியா வெஸ் சூரியா போன்ற தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த தெலுங்கு இளம் நாயகன் நிகில் தற்போது அமெரிக்காவில் நடிப்பு குறித்து பயிற்சி எடுத்து வருகின்றார்.

இன்னும் மூன்று மாதங்களில் அந்த பயிற்சி வகுப்புகள் முடிவடையப் போகின்றதாம். பயிற்சியை முடிக்கும் முன்னரே நிகில் தனது அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். சாய் தேஜா புரொடக்ஷென்ஷ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்தில்தான் நிகில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தினை இயக்குநர் கொண வெங்கட் இயக்கவுள்ளார். கார்த்திகேயா, சூரியா வெஸ் சூரியா போன்ற படங்களின் வெற்றிக்கு இயக்குநர் சண்டு மொடேதியின் வசனங்களும் காரணமாக அமைந்தன.

எனவே நடிகர் நிகில் நாயகனாக நடிக்கும் அடுத்த படத்திலும் இயக்குநர் சண்டு மொடேதி தனது பங்களிப்பினை தவறாது வழங்குவார் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions