ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'

Bookmark and Share

ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'

'நிலா நிலா ஓடிவா' என்ற வரிகளை தலைப்பாக கேட்டவுடனே நாம் நிச்சயம் இது 'குழந்தைகள்' பற்றி ஏதேனும் ஒன்றாக தான் இருக்கும் என்று யூகிப்போம். ஆனால் ஆச்சரியமான ஒரு திருப்பமாக அது ஒரு வாம்பயர் சார்ந்த ரொமாண்டிக் காமெடி.

வலைத் தொடர் உலகம் என்பது புதிய விஷயங்ளை செய்ய ஒரு பரந்த அளவிலான வாய்ப்பை வழங்குகிறது. 'வாம்பயர்' கதைகள் ஹாலிவுட் மற்றும் மேற்கத்திய திரைப்படத் துறையில் நன்கு பரிச்சயமாக இருந்தாலும், நமது சொந்த தமிழ் தொழில் துறையில் உலகளாவிய வீடியோ ஆன் டிமாண்ட் 'Viu' மூலம் பரிச்சயம் ஆக இருக்கிறது.

அஸ்வின் காகமானு மற்றும் சுனைனா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடிக்க நிலா நிலா ஓடி வா' என்ற வலைத்தொடர் மூலம் இயக்குனர் ஜேஎஸ் நந்தினி இதனை முயற்சி செய்கிறார்.

டிஜிட்டல் தளத்தின் உலகில் வலுவான வெற்றியாளராக வளர்ந்து வரும் 'Viu' ஏற்கனவே பல்வேறு கூறுகளின் மூலம் எல்லோருடைய ஆர்வத்தையும் கைப்பற்றியிருக்கிறது. இந்த வாம்பயர் அடிப்படையிலான ரொமாண்டிக் காமெடி வலைத்தொடர் வரும் ஜூலை 24 முதல் 'Viu'வில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Viu பற்றி புகழ்ந்து பேசும் நந்தினி கூறும்போது, "தயாரிப்பாளர்களுக்கு இணங்கி சில படைப்பு சமரசங்கள் செய்யும் இந்த காலச்சூழலில், ஒரு படைப்பாளர் அல்லது இயக்குனர் முழு சுதந்திரத்தை வெளிப்படுத்துவது என்பது எளிதான விஷயம் அல்ல. எனினும், Viu ஒரு முழுமையான விதிவிலக்காக இருந்தது.

நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தெளிவான அணுகுமுறை மட்டுமல்லாமல், ஒரு இயக்குனராக எனக்கு அவர்கள் முழு சுதந்திரம் வழங்கியதும் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

முன்னணி நடிகர்களின் கதாபாத்திரத்தை பற்றி அவர் கூறும்போது, "அஸ்வின் ஓம் என்ற ஒரு பச்சை குத்தும் கலைஞராக நடித்திருக்கிறார். அவரின் கல்லூரி காதலி நிலா (சுனைனா) ஒரு முழுமையான, கொடூரமான வாம்பயராக மாறி விட்டார் என்பதை உணர்ந்த பிறகு வாழ்க்கை தடம் மாறுகிறது.

தன் கதாபாத்திரம் முழுமை அடைவதற்கு நிறைய முயற்சிகள் எடுத்தார் அஸ்வின். கதாபாத்திரத்திற்காக நிறைய பச்சை குத்திக் கொள்வார், முன்பை விட மிகச்சிறப்பான, முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சுனைனா ஒரு வாம்பயராக நடிக்க மிகவும் உற்சாகமாக இருந்தார். அவரது அழகிய தோற்றம் மற்றும் தனிச்சிறப்பான நடிப்பு ஆகியவை நிபந்தனையற்ற வகையில் கலந்து கதாபாத்திரத்திற்கு உயிராக அமைந்தன.

ஸ்ரீகிருஷ்ணா தயாள், அஸ்வத், கேப்ரியலா, மிஷா கோஷல், அனுபமா குமார், அபிஷேக் வினோத், பிரவீன், ஷிரா மற்றும் ஹரிஷ் என மிகச்சிறப்பான நடிகர்கள் இந்த தொடரில் நடித்திருப்பது இயக்குனருக்கு மேலும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

ஒரு வாம்பயர் அடிப்படையிலான ரொமாண்டிக் - காமெடி வார்த்தைகளில் வரையறுக்க அல்லது ஸ்கிரிப்ட்டை விவரிக்க எளிதானதாக இருக்கலாம், ஆனால் மிகப்பெரிய சவால் வலுவான தொழில்நுட்பக் குழுவின் கையில் தான்  உள்ளது.

இயக்குனர் நந்தினி மேலும் கூறும்போது, "ஒட்டுமொத்த தொழில்நுட்ப கலைஞர்களும் சிறந்த பங்களிப்பை அளித்திருந்தார்கள். இந்த வகை சினிமாவுக்கு இருண்ட மற்றும் பயமுறுத்தும் வகையில் காட்சிகள் தேவை என்பதால், ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் பாரம்பரிய திரைப்பட செட் லைட்டிங் அல்லாமல், சாதாரண  விளக்குகளையே பயன்படுத்தினார்.

டாட்டூ ஸ்டுடியோ தான் கதையின் மையம் என்பதால்  கமல் (கலை இயக்குனர்), விஜய் மற்றும் நான் ஒரு வித்தியாசமான தோற்றத்தை, வாம்பயர் அடிப்படையிலான காட்சிகளுக்காக அமைக்க வேண்டியிருந்தது.

இசையமைப்பாளர் அஸ்வத்தின் பின்னணி இசை, மூன்று அழகான பாடல்கள், மற்றும் ஒரு நவநாகரீக தலைப்பு பாடல் அனைவராலும் கண்டிப்பாக கவனிக்கப்படும். பிரபு சந்திரசேகர், வியக்க வைக்கும் வகையில் சண்டை காட்சிகளை வழங்கியுள்ளார்.

இது ஒரு பெரிய ஆக்‌ஷன் திரைப்படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு இணையாக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றார்.


Post your comment

Related News
நடிகை போலீசில் புகார் - சின்னத்திரை உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை
'இமைக்கா நொடிகள்' வெற்றி என் விடாமுயற்சிக்கு கிடைத்த வெகுமதி - அதர்வா முரளி!
சண்டைக்காட்சிகளில் நடித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது - அதர்வா
இமைக்கா நொடிகள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions