ஒருவழியாக வெளியாகும் ’நிமிர்ந்து நில்’ தெலுங்கு

Bookmark and Share

ஒருவழியாக வெளியாகும் ’நிமிர்ந்து நில்’ தெலுங்கு

சமுத்திரக்கனி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜெயம் ரவி, அமலா பால் மற்றும் பலர் நடிக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த திரைப்படம் ’நிமிர்ந்து நில்’. சில பல தடைகளைக் கடந்துதான் இந்தப் படம் தமிழில் வெளியானது.

மார்ச் 7ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு ஒரு நாள் தாமதமாக 8ம் தேதிதான் வெளியானது. எந்த ஒரு படமாக இருந்தாலும் அது குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் ஒரு நாள் தாமதமாக வெளியானால் கூட, அது ரசிகர்களின் வரவேற்பை அதிகம் பெறாது என்ற சென்டிமென்ட் தமிழ் சினிமாவில் உண்டு.

அது இந்தப் படத்திற்கும் நடந்தது. தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு அப்போதே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி அந்தப் படம் அப்போது வெளியாகவில்லை.

தொடர்ந்து சில தேதிகள் அறிவிக்கப்பட்டு அதன் பின்னரும் அந்தப் படம் வெளியாகாமலே போனது. தற்போது மார்ச் மாதம் 27ம் தேதியன்று யுகாதி தினத்தன்று இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

நானி, அமலா பால் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். நானி நடித்து இதற்கு முன் வெளிவந்த சில தெலுங்குப் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்தப் படம் வெளியாகும் போதும் நானியின் மற்றொரு தெலுங்குப் படமான ’எவனே சுப்பிரமணியம்’ படமும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
நடிகை போலீசில் புகார் - சின்னத்திரை உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
விறுவிறுப்பாக உருவாகி வரும் `வெண்ணிலா கபடி குழு-2'
பாகுபலி டீமுடன் முதல்வன் இரண்டாம் பாகம் ரெடி- ஆனால் இயக்குனர் ஷங்கர் இல்லையா?
பாவனாவை கடத்தியவனை விசாரிக்கையில் மொபைல் போனில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்
பாவனா வழக்கில் கைதான டிரைவர் பல நடிகைகளை மிரட்டி ஆபாச படம் எடுத்தாரா?: தீவிர விசாரணை
பாவனா முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம்: முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions