நிரோஷாவின் ஹோம் ஒர்க்!

Bookmark and Share

நிரோஷாவின் ஹோம் ஒர்க்!

1988-ல் மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் படத்தில் அறிமுகமானவர் நிரோஷா. முதல் படத்தில் சுண்டியிழுக்கும் கிளாமர் காட்சிகளில் நடித்து இளவட்ட ரசிகர்களின் கனவுக்கன்னியானார் நிரோஷா. அதையடுத்து சில படங்களில் நடித்தவர், செந்தூரபூவே படத்தில் ராம்கியுடன் இணைந்து நடித்தார்.

அப்போது அவர்களுக்கிடையே காதல் உருவானது. அதனால் சில ஆண்டுகளுக்குப்பிறகு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு சினிமாவில் படவாய்ப்புகள் குறைந்தால் சின்னத்திரைக்கு வந்து சின்ன பாப்பா பெரிய பாப்பா நகைச்சுவை தொடரில் நடித்தார்.

திருமணத்திற்கு பிறகு அவரது ஒல்லிக்குச்சி உடம்பு உருண்டு திரண்டதால் அந்த காமெடி தொடருக்கு பொருத்தமாக இருந்தார் நிரோஷா. மேலும், அந்த சீரியலில் ஆரம்பத்தில் ஸ்ரீப்ரியாவுடன் இணைந்து நடித்த நிரோஷா, தற்போது நளினியுடன் இணைந்து எதிரும் புதிருமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

முழுக்க முழுக்க காமெடியை மையமாகக் கொண்டுள்ள அந்த தொடரில் கொஞ்சம் வித்தியாசமான காமெடி காட்சிகள் என்றால் அவற்றை முன்னமே ஹோம் ஒர்க் செய்து மைண்டில் ஏற்றிக்கொண்டு வந்தும் நடிக்கிறாராம் நிரோஷா.

பல ஆண்டுகளாக மொத்தம் 3 சீசன்களில் அந்த தொடரில் நடித்து விட்டதால், தனது நடிப்பில் ஏதேனும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காகவே இப்போது முன்கூட்டியே ஐடியா செய்து கொண்டு நடிக்கிறாராம் நிரோஷா.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions