நிதின் சத்யா தயாரிப்பாளர் ஆனார்

Bookmark and Share

நிதின் சத்யா தயாரிப்பாளர் ஆனார்

‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் அறிமுகமாகி ‘சென்னை 28’ ‘சத்தம் போடாதே’ , ‘திருடன் போலீஸ்’ உள்பட பல படங்களில் நடித்தவர் நிதின் சத்யா. இவர் தற்போது ‘பிளாஸ்’ கண்ணனோடு இணைந்து, ‘பிரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’ என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். 

இந்த நிறுவனத்தின் சார்பில் நிதின் சத்யா தயாரிக்கும் முதல் படத்தை அறிமுக இயக்குநர் நந்தா மணிவாசகம் இயக்குகிறார். பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகள் பூஜையுடன் தொடங்கியது. 

இந்த நிகழ்ச்சியில் பிரபுதேவா ஸ்டுடியோஸ் கே.கணேஷ், இயக்குனர் வெங்கட் பிரபு, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், நடிகர் விஜய் வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தயாரிப்பாளர் ஆனது பற்றி நிதின் சத்யா கூறும்போது,  திரைப்பட உலகில் இன்றியமையாததாக இருப்பது வெள்ளிக்கிழமை.

அதனால் தான் எங்கள் நிறுவனத்திற்கு பிரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட் என்ற பெயரை தேர்ந்தெடுத்தோம். வலுவான கதைக்களமும், சிறந்த கதையம்சமும் கொண்ட தரமான படங்களை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறேன் என்றார்.

 


Post your comment





Related News
தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த நடிகர் சத்யராஜ்
ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தலைவணங்குகிறேன்: சத்யராஜ்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கார்த்தி, சத்யராஜ் பங்கேற்பு
நான் வைத்த விஜய் கட்-அவுட்டை உடைத்தது யார் என்று தெரியும்? சத்யா சிறப்பு பேட்டி
லண்டன் ரசிகர்களை உற்சாகப்படுத்த தயாராக இருக்கின்றது ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்
ஜெ.வுக்கு அஞ்சலி: பலரும் கண்டுகொள்ளாத சசிகலாவுக்கு கும்பிடு போட்ட நடிகர் சத்யராஜ்
மீண்டும் ரசிகர்களுக்காக ரிஸ்க் எடுக்கும் அஜித்!
ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்: சகோதரர் சத்யநாராயணா பேட்டி
சத்யராஜுக்கு ஜோடியான அமலாபால்
‘கிட்னாப் – திரில்லர்’ படத்தை தயாரித்து நடிக்கும் சத்யராஜ்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions