லண்டன் ரசிகர்களை உற்சாகப்படுத்த தயாராக இருக்கின்றது ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்

Bookmark and Share

லண்டன் ரசிகர்களை உற்சாகப்படுத்த தயாராக இருக்கின்றது ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்

லண்டன் வாழ் தமிழ் ரசிகர்களை வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் உற்சாக வெள்ளத்தில் மூழ்கடிக்க தயாராக இருக்கின்றது ‘சென்னை 28 – II’ திரைப்படம்.இந்த அணியினரை லண்டன் – தமிழ் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கும் பெருமை நடிகர் நிதின் சத்யாவின் ‘ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்திற்கு இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

“ஒரு நடிகராக என்னை அனைவருக்கும் அடையாளம் காட்டிய திரைப்படம் சென்னை 28…. என்னுடைய தயாரிப்பில் உருவாகும் முதல் படமும் ஏறக்குறைய அதே குழுவினரை தான் உள்ளடக்கி இருக்கின்றது.சமீபத்தில் நடைபெற்ற அந்த பட பூஜையில், என்னுடைய சென்னை 28 அணியினர் திரளாக வந்து கலந்து கொண்டு, தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைக்கும் எனக்கு நல்லதொரு வரவேற்பை அளித்தனர்….

நடிகர் – தயாரிப்பாளர் என்பதை தாண்டி என்னை தற்போது ஒரு விநியோகஸ்தராகவும் அறிமுக படுத்தி இருக்கிறது சென்னை 28 II திரைப்படம்.சென்னை 28 இரண்டாம் பாகத்தின் லண்டன் வெளியீட்டு உரிமையை என்னுடைய ‘ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’ சார்பில் நான் வாங்கியிருப்பது எனக்கு பெருமையாகவும்,

மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது.” என்று உற்சாகமாக உற்சாகமாக கூறுகிறார் ‘ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் நிதின் சத்யா.


Post your comment





Related News
தங்கல், துருவங்கள் பதினாறு, சென்னை 28 || பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
“ச்ச.. நான் நடிச்சிருக்கனும்” சென்னை 28 பார்த்துவிட்டு கலங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்!
வசூல் மழை கொட்டும் சென்னை 28 பார்ட் 2 – முழு விவரம் உள்ளே!
நிதின் சத்யா தயாரிப்பாளர் ஆனார்
பிச்சைக்காரனுடன் கனக்ஷன் ஆகும் சென்னை 28 பார்ட் 2!
திகிலுக்கும், நகைச்சுவைக்கும் எந்த விதத்திலும் பஞ்சம் இருக்காது சொல்கிறார் நிதின் சத்யா!
சென்னை 28 பார்ட் 2 முழுக்க முழுக்க கிராமத்து கதையாம்!
நிதின்-பூரி ஜெகன்நாத் படப்பிடிப்பு ஜூன் 25 முதல் துவக்கம்
ஸ்ருதி ஹாஸனை வெட்கத்தால் முகம் சிவக்க வைத்த தெலுங்கு நடிகர் நிதின்
உலகளவில் அங்கீகாரம் பெற்ற வெங்கட் பிரபு படம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions