சார்மியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நிதின் திட்டம்?

Bookmark and Share

சார்மியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நிதின் திட்டம்?

டோலிவுட்டின் வெற்றி பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் இயக்கத்தில் நடிகை சார்மி நடித்து அண்மையில் வெளிவந்த ஜோதிலக்ஷ்மி படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்கும் அடுத்த படத்தில் நிதின் நாயகனாக நடிப்பார் என்று கூறப்பட்டது.

தீடீரென இப்படம் கைவிடப்பட்டதாக நிதின் அறிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த  நடிகை சார்மி, நிதினிடம் படம் தயாரிப்பதற்கு போதிய பொருளாதார வசதி இல்லாததன் காரணமாகவே நிதின் - பூரி படம் கைவிடப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

இது நிதின் தரப்பில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். சார்மி தனது கருத்திற்கு மன்னிப்பு கோரியிருந்த போதும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நிதின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதற்கு முன்னதாக தவறான கருத்தை வெளியிட்ட சார்மி மீது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்க நிதின் மற்றும் அவரது தந்தை சுதாகர் ரெட்டி முடிவு செய்துள்ளனராம்.

நிதின் நீக்கப்பட்ட அப்படத்தில் வருண் தேஜா நாயகனாக நடிக்கின்றார். சார்மி தயாரிப்பாளர் கல்யாணுடன் இணைந்து அப்படத்தை தயாரிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions