முத்தக் காட்சியில் நித்யா மேனன்?

Bookmark and Share

முத்தக் காட்சியில் நித்யா மேனன்?

'ஓ காதல் கண்மணி' படம் மூலம் மீண்டும் ஒரு 'அலைபாயுதே' மேஜிக்கை மணிரத்னமும், ஏ.ஆர்.ரகுமானும் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று ரகுமானின் இசை ரசிகர்கள் மட்டுமல்லாது, மற்ற இசை ரசிகர்களும் சொல்லி வருகிறார்கள்.

இன்றைய தலைமுறை இயக்குனர்களுக்கு ஈடு கொடுக்கும் அளவில் மணிரத்னம் 'ஓ காதல் கண்மணி' படத்தை புதுமையாகக் கொடுத்திருக்கிறாராம். கோடை விடுமுறையில் விரைவில் வெளிவர இருக்கும் இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.

துல்கர் சல்மான் தமிழில் அறிமுகமான 'வாயை மூடி பேசவும்' படம் தோல்வியடைந்தாலும் இந்தப் படம் அவருக்கு நல்ல திருப்பு முனையை ஏற்படுத்தும் என்கிறார்கள். நித்யா மேனன் நான்கைந்து தமிழ்ப் படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் இன்னும் வெற்றிகரமான நாயகியாக வலம் வராமல் இருக்கிறார்.

இவர்களிருவருரையும் படத்தில் நிஜக் காதலர்கள் போல மணிரத்னம் நெருக்கமாகவே நடிக்க வைத்திருக்கிறார் என்கிறார்கள். படத்தில் முத்தக் காட்சி கூட இருக்கிறது என்று சிலர் வதந்தி (?) பரப்பி வருகிறார்கள்.

ஆனால், நித்யா மேனன் இதுவரை கிளாமராகக் கூட நடித்ததில்லை. ஒருவேளை மணிரத்னம் இயக்கம் என்பதால் அவர் முத்தக் காட்சிக்கு சம்மதித்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

அதற்கேற்ற விதத்தில் படத்தின் சில புகைப்படங்கள் நெருக்கமாக உள்ளதை சுட்டிக் காட்டுகிறார்கள். எப்படியோ இன்னும் சில நாட்களில் தெரியத்தானே போகிறது.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions