முன் வரிசைக்கு வருகிறார் நித்யா மேனன்

Bookmark and Share

முன் வரிசைக்கு வருகிறார் நித்யா மேனன்

அழகும், திறமையும் மிக்க நடிகைளில் நித்யா மேனனும் ஒருவர். தான் உண்டு தன் வேலையுண்டு இருப்பவர். எந்த கிசுகிசுக்களிலும் சிக்கிக் கொள்ளாதவர். மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் 2011ம் ஆண்டு, 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன் பிறகு வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவுக்கு வந்த 5 வருடங்களில் அவர் நடித்தது 3 படங்களில் மட்டும்தான். மலையாளம், கன்னடத்தில் பிடித்த இடத்தை தமிழில் பிடிக்க முடியவில்லை.

தற்போது நித்யா மேனன், தமிழில் வேகமாக முன் வரிசைக்கு வந்து கொண்டிருக்கிறார். ஜே.கே என்னும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நித்யாவின் நடிப்பை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ராகவா லாரன்சின் கங்கா (முனி 3), மணிரத்தினத்தின் ஓகே கண்மணி, படங்கள் வர இருக்கிறது. ரோகினி இயக்கி உள்ள அப்பாவின் மீசை படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்றாலும் ஓகே கண்மணி தனக்கு தமிழில் நல்ல இடத்தை தரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் நித்யா மேனன்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions