நிபந்தனை விதிக்கிறேனா? நித்யா மேனன் விளக்கம்

Bookmark and Share

நிபந்தனை விதிக்கிறேனா? நித்யா மேனன் விளக்கம்

பொதுவாக நித்யா மேனன் ஒரு படத்தில் நடிப்பதற்கு முன் நிறைய நிபந்தனைகள் விதிப்பார் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்பார் என்ற தகவல் தமிழ் சினிமாவில் பரவிக்கிடக்கிறது. இது குறித்து நித்யா என்ன சொல்கிறார்.

"சினிமாவை நான் ஒரு கலையாக பார்க்கிறேன். பணம் சம்பாதிக்கும் தொழிலாக பார்ப்பதில்லை. நான் நடிக்கும் கேரக்டர் எனக்குள் நுழைய வேண்டும். சும்மா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தோம், சொல்லிக்கொடுத்த வசனத்தை மனப்பாடம் செய்தோம். டைரக்டர் சொன்னபடி நடித்தோம், சென்றோம் என்று என்னால் இருக்க முடியாது.

நான் நடிக்கும் கேரக்டரில் நான் வாழ்ந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் அதை உணர்ந்து நடிக்க முடியும். காஞ்சனா 2 வில் கால் ஊனமுற்ற பெண் கேரக்டர் நீங்கதான் நடிக்கணும்னு லாரன்ஸ் சார் சொன்னதும் நான் உடனே ஓகே சொல்லவில்லை எனக்கு கொஞ்சம் டயம் கொடுங்கன்னு கேட்டு, வீட்டில் ஊனமுற்ற பெண்ணாக கால்வலிக்க நடந்து பார்த்து எனக்கு திருப்பி வந்த பிறகே ஒப்புக் கொண்டேன்.

அதற்காக லாரன்ஸ் சார் 2 மாதம் காத்திருந்தார். எனது கேரக்டர் பற்றி நிறைய கேள்விகள் கேட்பேன். எனக்கு திருப்தி ஏற்பட்டுவிட்டால் அதன் பிறகு எந்த கேள்வியும் இருக்காது. இந்த கேள்விகளை நிபந்தனை என்று எடுத்துக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும்.கிளாமராக நடிக்க பலர் அழைத்தார்கள்.

அப்படி நடித்து எனது வங்கி கணக்கையும், நடிக்கும் படங்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. எந்த கேரக்டரையும் அனுபவித்து நடிக்க விரும்புகிறேன். அதனால் காலஅவகாசம் எடுத்துக் கொள்வேன். அதில் தவறில்லை" என்று நினைக்கிறேன் என்கிறார் நித்யா மேன்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions