உயரமான ஹீரோக்களுடன் நடிக்க தயாராகும் நித்யாமேனன்!

Bookmark and Share

உயரமான ஹீரோக்களுடன் நடிக்க தயாராகும் நித்யாமேனன்!

மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படங்கள் நித்யாமேனனுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்காதபோதும், அதையடுத்து அவர் நடித்த ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2  படங்கள் அவரை வெற்றிப்பட நாயகியாக்கி விட்டன.

அதனால், இதுவரை அவரை கண்டுக்கொள்ளாமல் இருந்த கமர்சியல் டைரக்டர்கள் இப்போது அவரிடம் கால்சீட் வாங்க நீண்ட கியூவில் நிற்கின்றனர்.

அதோடு, உயரமான ஹீரோக்களுடன் நடிப்பதற்கு ஏற்ற உயரம் அவரிடம் இல்லை என்பதை சிலர் சுட்டிக்காட்டி, பாடல் காட்சிகளில் எப்படி நடனமாடுவீர்கள்? என்கிறார்களாம்.

அதற்கு, ராணி ருத்ரம்மா தேவி படத்தில் 6 அடிக்கும் அதிகம் உயரம் கொண்ட அனுஷ்காவுடன் இணைந்து ஒரு பாடலில் நான் நடனமாடியிருக்கிறேன். அப்போது அதிக உயரம் கொண்ட ஹீல்ஸ் அணிந்து கொண்டு நடனமாடினேன்.

அப்போது எனது உயரம் ஒரு குறையாகவே தெரியவில்லை. அதனால், எத்தனை பெரிய உயரமான ஹீரோக்களுடனும் இணைந்து நடிக்கக்கூடிய தைரியம் இப்போது எனக்கு ஏற்பட்டுள்ளது என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வரும் நித்யாமேனன், அடுத்த மாதம் ராணி ருத்ரம்மா தேவி படம் திரைக்கு வந்துவிடும்.

அந்த படத்தில் அனுஷ்காவுடன் நான் நடனமாடியிருப்பதை பார்த்து விட்டு முடிவு செய்யலாம் என்றும் தில்லாக பேசுகிறாராம்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions