ஹீரோவுக்கு தங்கையாக சாவித்திரி நடிக்கலயா? ஹீரோயின்கள் மீது நித்யா மேனன் சாடல்

Bookmark and Share

ஹீரோவுக்கு தங்கையாக சாவித்திரி நடிக்கலயா? ஹீரோயின்கள் மீது நித்யா மேனன் சாடல்

ஹீரோக்களுக்கு ஜோடி போடவே ஹீரோயின்கள் விரும்புவர். ஹீரோவுக்கு தங்கையாக நடிக்க வேண்டுமென்றால் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள். சமீபகாலமாக ஹீரோவின் தங்கை வேடத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டால் கைவிரிக்கின்றனர்.

தங்கையாக நடித்தால் தொடர்ந்து அதேபோன்ற வேடங்கள் வரும் என்பதுதான் இதற்கு காரணம். இதில் விதிவிலக்கு நித்யா மேனன். ‘சன் ஆப் சத்யமூர்த்தி‘ தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார்.

அவருடன் நடிக்க தூதுவிட்ட பல ஹீரோயின்களிடம் தங்கையாக நடிக்க வேண்டும் என்றதும் ஒதுங்கிக்கொண்டனர். நூற்றெண்பது, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் நித்யா மேனனிடம் கேட்டபோது ஒப்புக் கொண்டார்.

இதுபற்றி அவர் கூறும்போது,

‘ஹீரோக்களின் தங்கை வேடத்தில் சாவித்திரி உள்ளிட்ட நடிகைகள் நடிக்கவில்லையா? இதன் மூலம் அவர்களது திறமை வெளிவந்தது. அதை ஏன் மற்றவர்கள் மறந்துவிடுகிறார்கள். ஷாருக்கான் தங்கையாக 'ஜோஷ்' இந்தி படத்தில் நடித்திருந்தாலும் பின்னர் அவருக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யாராய். தங்கை வேடம் ஏற்பதால் எதிர்காலத்தில் எனது சினிமா வாய்ப்புகள் பாதிக்காது என்றே எண்ணுகிறேன்' என்றார்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions