நித்யா மேனனுக்கு தமிழில் முதல் 'டபுள்' வெற்றி

Bookmark and Share

நித்யா மேனனுக்கு தமிழில் முதல் 'டபுள்' வெற்றி

'ஓ காதல் கண்மணி' படத்தில் தனது நடிப்பின்  மூலமாக திரைப்பட ரசிகர்களின் மனதை நித்யா மேனன் கொள்ளை கொண்டு விட்டார். இதற்கு முன் பல தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் ஒரு படம் கூட நித்யாவுக்கு வெற்றிப் பட வரிசையில் சேரவில்லை.

ஆனால், முதல் முறையாக ஒரே நாளில் தமிழில் அவர் நடித்து வெளிவந்த இரண்டு படங்களான 'ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2' ஆகிய படங்களின் மூலம் 'டபுள் வெற்றி' யைப் பெற்று விட்டார்.

இரண்டு படங்களுமே இரண்டு நாட்களாக வசூல் குறையாமல் வெற்றிப் பட வரிசையில் இடம் பெற்று விட்டது. தமிழில் முதன் முதலாக மணிரத்னத்தின் நெருங்கிய நண்பரான ஜெயேந்திரா இயக்கிய '180' படத்தில்தான் நித்யா மேனன் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஆனால், அதற்கு முன்பாகவே தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்து விட்டார். '180' படம் வெளிவந்து வெற்றி பெறாமலே போய்விட்டது. அதைத் தொடர்ந்து நித்யா மேனன் நடித்த, “வெப்பம், மாலினி 22 பாளையம் கோட்டை,” ஆகிய படங்களும் தோல்விப் படங்களாகவே அமைந்தது.

அவர் நாயகியாக நடித்த சேரன் இயக்கிய 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' படமும் டிவிடி வடிவில்தான் வெளியானது. அறிமுகமாகி நான்கு படங்களில் நடித்த பிறகுதான் முதல் முறையாக ஒரே நேரத்தில் இரண்டு வெற்றிப் படங்களில் நடித்த பெருமையான பட்டியலில் நித்யா மேனன் இடம் பெறுகிறார்.

இனி, தமிழ்ப் பட இயக்குனர்களின் தேடுதல் பட்டியலில் நித்யாவும் கண்டிப்பாக இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions