சர்ச்சை கதையில் நடித்தது ஏன்?: நித்யாமேனன் விளக்கம்

Bookmark and Share

சர்ச்சை கதையில் நடித்தது ஏன்?: நித்யாமேனன் விளக்கம்

நித்யாமேனன் நாயகியாக நடித்த 'ஓ காதல் கண்மணி' படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் சர்ச்சை கதையம்சம் உள்ள படமாக இது வந்துள்ளது.

இந்த படத்தில் நடித்தது ஏன் என்பதற்கு நித்யாமேனன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

இயக்குனர் மணிரத்னம் கதை சொன்னபோது காதல், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, என பல விஷயங்கள் இருந்தது. அப்போதே கேரக்டரில் என்னை பொருத்தி பார்த்தேன். நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள படம் என்று தோன்றியது. கதையும் மிகவும் பிடித்தது.

இதுபோன்ற விஷயங்களில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கும். அது சரியா, தவறா என்று யாரும் சொல்ல முடியாது. சமூகத்தில் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

முந்தைய காலங்களில் ஒருத்தரையொருத்தர் பார்க்காமலேயே திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் கடைசிவரை சேர்ந்தே வாழ்ந்தார்கள்.
ஆனால் இப்போது அப்படி இல்லை.

விருப்பங்கள் மாறிக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் கேரக்டர் மற்றும் கதையை புரிந்து நடித்தால் காட்சி நன்றாக வரும். எனக்கு வித்தியாசமான கேரக்டர்கள் அமைகின்றன.

சிறு கேரக்டராக இருந்தாலும் எனக்கு பிடித்து இருந்தால் சம்மதிப்பேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்க மாட்டேன். சிறிய வேடமாக இருந்தாலும் வலுவானதாக இருந்தால் நடிப்பேன்.

இவ்வாறு நித்யாமேனன் கூறினார். 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions