25 நாட்களில் 3 படம் - லட்சுமிராயை தொடர்ந்து நித்யா மேனன் சாதனை..!

Bookmark and Share

25 நாட்களில் 3 படம் - லட்சுமிராயை தொடர்ந்து நித்யா மேனன் சாதனை..!

கொஞ்ச நாட்கள் பீல்டிலேயே ஆளை பார்க்க முடியாத அளவுக்கு கடந்த இரண்டு வருடங்களாக அப்ஸ்கான்ட் ஆகியிருந்தார் நித்யா மேனன். ஆனால் இந்த வருட துவக்கத்திலேயே தெலுங்கில் அவர் நடித்த 'மல்லி மல்லி இதி ராணி ரோஜு' படம் மூலம் தனது முதல் என்ட்ரியை பிப்-6ஆம் தேதி துவக்கினார்.

மார்ச்-6ல் சேரன் இயக்கத்தில் நித்யா நடித்த 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' ரிலீஸானது. அதன்பின் கடந்த மார்ச்-20ஆம் தேதி மலையாளத்தில் இவர் நடித்த '1௦௦ டேய்ஸ் ஆப் லவ்' படம் வெளியானது.

இதோ, வரும் ஏப்ரல்-10ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள 'ஓ காதல் கண்மணி' ரிலீஸாக இருக்கிறது. இதில் முதல் இரண்டு படங்களில் சர்வானந்த்துக்கு ஜோடியாகவும் அடுத்த இரண்டு படங்களில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

அந்த வகையில் 25 நாட்களில் 3 படம் வெளியான நடிகை என்கிற  புதிய சாதனை படைக்கவுள்ளார் நித்யா மேனன். இதன் மூலம் லட்சுமிராயின் 20 நாட்களில் 3 படம் என்கிற சாதனையை முறியடிக்காமல் அவருக்கு அடுத்த இடத்தில் பின்தொடர்கிறார் நித்யா மேனன்.  

கடந்த ஆகஸ்ட்-29ல் லட்சுமிராய் நடித்த 'இரும்பு குதிரை' வெளியானது. அடுத்ததாக மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்த 'ராஜாதி ராஜா' செப்டம்பர்-5ல் ஓணம் ஸ்பெஷலாக ரிலீசானது.

அடுத்த இரண்டு வாரங்களில் (செப்-19) சுந்தர்.சி டைரக்சனில் அவர் நடித்த 'அரண்மனை' வெளியானது.  இன்றைய போட்டி நிறைந்த சினிமா உலகில் நடிகைகளின் படங்கள் இப்படி குறுகிய காலத்தில் வெளியாவது விசித்திரமானது. ஆனால் அவர்களின் கேரியருக்கு ஆரோக்கியமானதா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions