நஸ்ரியா கேரக்டரை கேட்டு வாங்கிய நித்யா மேனன்..!

Bookmark and Share

நஸ்ரியா கேரக்டரை கேட்டு வாங்கிய நித்யா மேனன்..!

இப்போது 'பெங்களூர் டேய்ஸ்' படம் தமிழில் ரீமேக்காகிறது இல்லையா..? அந்தப்படத்தை பொறுத்தவரை நஸ்ரியாவின் உயிரோட்டமான துறுதுறு நடிப்பும், விதவிதமான எக்ஸ்பிரசன்களும் தான் அந்த கேரக்டரை தாங்கி பிடித்தன.

ஆனால் கொடுமை என்னவென்றால் மலையாளத்தில் நஸ்ரியா நடித்த கேரக்டரில், இங்கே நடிப்பவர் ஸ்ரீதிவ்யா. இவரது முதல் படத்தை தவிர்த்து ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை என மற்ற மூன்று படங்களிலும் கிட்டத்தட்ட ஒரேவிதமான எக்ஸ்பிரசன்களோடு ஒரு பொம்மை போலத்தான் வந்து போனார்.

இவரை எப்படி நஸ்ரியாவின் கேரக்டருக்கு செலக்ட் பண்ணினார்கள் என பலரும் ஆச்சர்யப்படுகிறார்கள். ஆனால் அதேசமயம் இந்தப்படம் தெலுங்கிலும் ரீமேக் ஆகிறது தானே..? அந்தப்படத்தை தெலுங்கில் இயக்கும் ஸ்ரீராம், நித்யா மேனனை அணுகி, பெங்களூர் டேய்ஸ் ஒரிஜினலில் நித்யா மேனன் நடித்திருந்த கேரக்டரையே தெலுங்கிலும் பண்ணுமாறு கூறியுள்ளார்.

ஆனால் நித்யா மேனன் அதை மறுத்துவிட்டு, நஸ்ரியா நடித்த துறுதுறு கேரக்டரை தனக்கு தரும்படி கேட்டு வாங்கிக்கொண்டார். இப்போது வெளியாகியுள்ள 'காஞ்சனா-2', 'ஓ காதல் கண்மணி' என இரண்டு படங்களிலும் நித்யா மேனனின் நடிப்பு நன்றாக பேசப்படுவதால், நஸ்ரியா கேரக்டருக்கு நித்யா மேனன் தான் சரியான ஆள் என டைரக்டர் ஸ்ரீராம் உட்பட படக்குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் ரசிகர்கள் தான் நஸ்ரியா கேரக்டரை ஸ்ரீதிவ்யா எப்படி தாங்கப்போகிறாரோ என கலக்கத்தில் உள்ளனர்.

 


Post your comment





Related News
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்
மொத்த போட்டியாளர்களுக்கும் ஆப்பு வைத்த பிக்பாஸ்! கடும் நடவடிக்கை
கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!
பிக்பாஸ் 2: அசிங்கமான வார்த்தையில் திட்டி மனைவியை கதறி அழ வைத்த பாலாஜி
போட்டியாளர்கள் இவ்வளவு மோசமாக பேசியும்.. நித்யா பாலாஜி தலைவியானது இப்படித்தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions