காதல்காலம் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட கமல்ஹாசன்

Bookmark and Share

காதல்காலம் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட கமல்ஹாசன்

வெப்படை ஜி.செல்வராஜ்-ன் தமிழ்கொடி பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜி.ஏ.சோமசுந்தரா இயக்கியுள்ள “காதல் காலம்” படத்தின் டிரெய்லர் இன்று காலை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டார்.

டிரெய்லரை வெளியிட்ட கமல்ஹாசன் படக்குழுவினரை பாராட்டினார். அவர் கூறியதாவது, காதல்காலம் தலைப்புக்கு ஏற்ற வகையில் இருக்கிறது. காதல் என்பது அனைத்து காலங்களிலும் அனைவராலும் உணரக்கூடியது. அதுவும் இந்த காதல் காலம் மிகவும் இளமையாகவும் அழகாகவும் தெரிகிறது.

அதுமட்டுமின்றி இவர்கள் அனைவரும் ஒரு கூட்டாக இணைந்து அற்புதமாக உருவாக்கியுள்ளார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல இந்த டிரெய்லர் மிகவும் நம்பிக்கையை தருகிறது. காதல் காலம் நிச்சயம் பெரிய வெற்றி படமாக அமைய வேண்டுமென்று வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

அறிமுக நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள “காதல் காலம்” திரைப்படம் முற்றிலும் காதல், நகைச்சுவை கலந்த கிராமத்து கதையாக மிகவும் யதார்த்தமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் இயக்குநரான ஜி.ஏ.சோமசுந்தரா திரைக்கதையின் சிற்பி கே.பாக்யராஜிடன் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சந்துரு கதாநாயகனாகவும் நித்யாஷெட்டி, சார்விசெக்குரி இருவரும் கதையின் நாயகிகளாகவும் நடிக்க மதுமிதா, ஜார்ஜ், அசோக்பாண்டியன் ஆகியோரும் நடிக்க, இயக்குநர்கள் புவி.என்.அரவிந்த், ரஃபி ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பி.ஆர்.ஓ. சரவணனின் மகன் அஸ்வத் அறிமுகமாகியுள்ளார்.

ஒளிப்பதிவை விஜய் கவனிக்க, படத்தொகுப்பை சண்முகம்வேலுச்சாமி செய்திருக்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளர் எஸ்.ஜெயானந்தன். இப்படத்தின் பாடல்களை பழனிபாரதி, நா.முத்துகுமார், பா.விஜய், சினேகன், இலக்கியன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

தயாரிப்பு நிர்வாகம் ஆர்.ஜி.மாரியப்பன்ராஜா, மக்கள் தொடர்பு என்.சரவணன்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions