தன் காதலை பற்றி கூறிய நித்யா மேனன்!

Bookmark and Share

தன் காதலை பற்றி கூறிய நித்யா மேனன்!

தமிழில் வெப்பம் படத்தின் மூலம் அறிமுகமான நித்யா மேனன் 180, மாலினி 22 பாளையங்கோட்டை, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, ருத்ரமாதேவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கு மற்றும் மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இந்நிலையில் நித்யா மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவருடைய திருமணம் குறித்து கூறியுள்ளார். அதில், “நான் என்னுடைய 18-வது வயதில் காதலித்தேன்.

பின்பு எங்கள் காதலில் சில வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் ஒரு கட்டத்தில் நான் நினைத்தேன் இவரோடு வாழ்ந்தால் என் வாழ்க்கை சந்தோசமாக இருக்காது என்று மனதுக்கு பட்டது. உடனே அவரை விட்டு விலகி விட்டேன்.

என் வாழ்க்கை இப்போது இருப்பதை விட திருமணத்திற்கு பிறகு இன்னும் சந்தோஷமாக இருக்கும் என்று ஒருவரை சந்திக்கும்போது எனக்கு தோன்றுகிறதோ அப்போது அவரை திருமணம் செய்துகொள்வேன்.

இதுவரை அப்படிப்பட்ட யாரையும் நான் சந்திக்கவில்லை. பொருத்தமில்லாத ஒருவனை திருமண செய்து கஷ்டப்படுவதை விட, திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது” இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions