சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் நித்யா மேனன்

Bookmark and Share

சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் நித்யா மேனன்

‘மாஸ்’ படத்திற்குப் பிறகு சூர்யா ‘24’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்ரம் குமார் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

கிரண் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். தற்போது நித்யா மேனனும் இப்படக்குழுவினருடன் இணைந்திருக்கிறார்.

சூர்யா இப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். ஒரு சூர்யாவுக்கு ஜோடி சமந்தாவும், மற்றொரு சூர்யாவுக்கு ஜோடி நித்யா மேனன் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக மும்பையில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் இறுதியில் படப்பிடிப்பு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தையடுத்து சூர்யா, ஹரி இயக்கத்தில் ‘சிங்கம் 3’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions