இந்த நடிகைக்கு 'அந்த' ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பா?: ஷாக்கில் ஹீரோயின்கள்

Bookmark and Share

இந்த நடிகைக்கு 'அந்த' ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பா?: ஷாக்கில் ஹீரோயின்கள்

ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நிவேதா தாமஸ். 

கேரளாவை சேர்ந்தவர் நிவேதா தாமஸ். விஜய்யின் குருவி படம் மூலம் கோலிவுட் வந்தார். 

விஜய் தங்கையாக ஜில்லா படத்திலும், கமல் ஹாஸனுக்கு மகளாக பாபநாசம் படத்திலும் நடித்துள்ளார். போராளி, நவீன சரஸ்வதி சபதம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

நானியின் ஜென்டில்மேன் படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் கடந்த ஆண்டு அடியெடுத்து வைத்தார். டோலிவுட்டுக்கு சென்ற வேகத்தில் அவருக்கு பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆரின் புதுப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒருவர் ராசி கன்னா மற்றொருவர் நிவேதா தாமஸ். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.

ஜூனியர் என்.டி.ஆர். படங்களில் பெரும்பாலும் இரண்டு ஹீரோயின்கள் இருப்பார்கள். அவரின் புதுப்படத்தின் கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் நிவேதா. அவர் ஜூன் அல்லது ஜூலை மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் மீண்டும் நானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நிவேதா.

ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் நடிக்க முன்னணி ஹீரோயின்கள் எல்லாம் லைன் கட்டி நிற்க நிவேதாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பார்த்து முன்னணி ஹீரோயின்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

 


Post your comment





Related News
விஜய்யின் தங்கை இன்று பவன் கல்யாணுக்கும் தங்கை!
அஜித் படத்தில் நிவேதா தாமஸ் – ருசிகர தகவல்!
‘அடியே அழகே’ நிவேதாவுக்கு அடித்த ஜாக்பாட்!
நாகார்ஜூனாவின் இளைய மகனுடன் ஜோடி சேரும் நிவேதா தாமஸ்!
நிவேதா தாமஸ்க்கு நடிகர் சங்கம் போட்ட ரெட் கார்ட்!
விஜய்யின் தங்கைக்கு சினிமாவில் நடிக்க தடை?
தெலுங்கில் பிரபலமாகும் விஜய்யின் தங்கை!
நிவேதா தாமஸ் போட்ட கண்டிஷன்!
நடிகர் மகனுக்கு ஜோடியானார் இயக்குநரின் உறவுக்கார பெண்!
திரிஷ்யம் ரீமேக்கில் கமல் மகளாக நடிக்கும் நிவேதா தாமஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions