ஒரு நாள் கூத்து படத்தில் நடிக்கும் அரபு நாடுகளின் இந்திய அழகி!

Bookmark and Share

ஒரு நாள் கூத்து படத்தில் நடிக்கும் அரபு நாடுகளின் இந்திய அழகி!

தினேஷ்– மியா ஜார்ஜ், நிவேதா உள்பட பலர் நடித்துள்ள படம் ‘ஒரு நாள் கூத்து’. இதன் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கூறியது....

“திருமணம் என்றதும் இனம்புரியாத மகிழ்ச்சி எழுவதும் காரணம் தெரியாத கனவு மலர்வதுமாக இருந்ததெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் திருமணம் என்றாலே ஒரு வித பதற்றமும் மன அழுத்தமும் சூழ்ந்து கொள்கின்றன.

சற்றுத் தள்ளி நின்று பார்த்தால், திருமணம் என்பதே ஒரு கூத்து போலவே தோன்றும். ஊரே கூடும். பலரும் பாத்திரங்களாக வருவார்கள்.

அவ்வப்போது தங்கள் குணச்சித்திரங்களை வெளிப்படுத்துவார்கள். அவரவருக்கு வசனங்கள் இருக்கும். பார்வையாளர்களும் பங்கேற்பவர்களும் கலந்து கொள்வார்கள். உச்சக்கட்ட காட்சி தாலி கட்டுவது. அதாவது திருமணம் நடப்பது என்றிருக்கும்.

இந்த கோணத்தில் கதை சொல்லும் படமாக உருவாகி இருப்பதுதான் ‘ஒரு நாள் கூத்து’. கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வகுமார் இதை தயாரித்துள்ளார்.

“ இது யதார்த்தமான, கலகலப்பான, திருமணம் சார்ந்த கதை. ஒவ்வொரு திருமணத்துக்கான ஓட்டமும் திருமணம் முடிந்ததும் நின்று விடுகிறது. திருமணம் இப்போதெல்லாம் சில சூழல்களில் ஒரு திணிப்பாகவும், நிர்ப்பந்தமாகவும், வன்முறையாகவும் மாறி வருகிறது.

திருமணத்துக்குப் பிந்தைய தருணங்களைப் பற்றி யாருமே நினைத்துப் பார்ப்பதில்லை. பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, வேலை இறுதியாகத் திருமணம், அத்துடன் வாழ்க்கை முடிந்து விடுவது போல் கருதுகிறார்கள். திருமணத்துடன் எல்லாம் முடிந்து விடுவதாக நினைக்கிறார்கள்.

இந்த படம் திருமணம் சார்ந்த சில கேள்விகளை எழுப்பி, நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும்”

இதில் அறிமுகமாகும் நிவேதா ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் இந்தியர்களின் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ் பேச தெரிந்தவர். இவர் சிறப்பாக நடித்திருக்கிறார். தினேஷ் இதில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக வருகிறார்.

அவர், புதிய தோற்றம், புதிய தன்மையுடன் வருகிறார். ‘இந்த படத்தின் கதையோ காட்சியோ பார்ப்பவர் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்” என்றார்.


Post your comment





Related News
சண்டைப்பயிற்சியில் தீவிரம் காட்டும் நிவேதா பெத்துராஜ்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
5 வயதில் எனக்கும் பாலியல் தொல்லை, அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்.!
நிவேதா பெத்துராஜா இது? பிகினி புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
தலயும் இல்ல, தளபதியும் இல்ல இவரை தான் பிடிக்கும் - விஜயின் தங்கை ஓபன் டாக்.!
பயமே இல்லையா? விஜயின் தங்கை புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!
இனி நடிக்க மாட்டேன், விஜய் பட பேமஸ் நடிகை முடிவால் ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions