அருகில் உள்ளவர்களை முட்டாளாக்கும் வேலையில் ஈடுபடும் நிவின்பாலி..!

Bookmark and Share

அருகில் உள்ளவர்களை முட்டாளாக்கும் வேலையில் ஈடுபடும் நிவின்பாலி..!

'நேரம்' படத்தில் நடித்த நிவின் பாலியின் நேரம் இப்போது ரொம்ப நன்றாகவே இருக்கிறது. கடந்த வருடம் அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட்டாக, இந்த வருட ஆரம்பமே அவருக்கு 'மிலி' யின் வெற்றியோடுதான் ஆரம்பமாகியிருக்கிறது.

தற்போது 'ஒரு வடக்கன் செல்பி' என்கிற படத்தில் நடித்து வருகிறார் நிவின்பாலி. இந்தப்படத்தை இயக்கும் பிரஜித், வினீத் சீனிவாசன் இயக்கிய, 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்', 'தட்டத்தின் மறயத்து' ஆகிய படங்களில் துணை இயக்குனராக வேலை பார்த்தவர்.  

அந்தப்படங்களில் ஹீரோவாக நடித்த நிவின் பாலிக்கும். இவருக்கும் ஏற்பட்ட நட்பும் புரிதலும் தான் இப்போது 'ஒரு வடக்கன் செல்பி' படம் உருவாக காரணமாக அமைந்திருக்கிறது.

இந்தப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் மஞ்சிமா மோகன் சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். சரி வடக்கன் செல்பி சொல்லவரும் கதை என்ன தெரியுமா..?  என்ஜீனியரிங் மாணவர்களான நிவின் பாலி மற்றும் அவரது நண்பர்களான அஜு வர்கீஸ், நீரஜ் மாதவ் மூவரும் அரியர்ஸ் வைத்துவிட்டு அதை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என பல வழிகளில் குட்டிக்கரணம் போட்டு வருபவர்கள்.. மற்ற நேரங்களில் கிராமத்தில் அருகில் உள்ளவர்களை முட்டாள்களாக்கி வேடிக்கை பார்ப்பதில் நிவின் பாலி & கோவுக்கு அவ்வளவு சந்தோசம்..

அவரது பெற்றோரோ தங்கள் மகன் படித்து பெரிய ஆளாக வருவான் என கனவு காண்கிறார்கள். ஆனால் நிவின் பாலியோ, குறுக்கு வழியானாலும் பரவாயில்லை, எப்படியாவது பெரிய ஆளாகவேண்டும் என கனவு காண்கிறார். இதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் 'ஒரு வடக்கன் செல்பி'யின் சுவராஸ்யமான கதையாம்.


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions