நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!

Bookmark and Share

நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!

நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் ரிச்சி படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதில் நிவினுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். ரிச்சி படம் பற்றி ஷ்ரத்தா பேசினார்.

தமிழிற்கும், தமிழ் நாட்டிற்கும் இதற்கு முன்பு எந்த தொடர்பும் இல்லாத எனக்கு இதுவரை அமைந்துள்ள சினிமா பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. இயக்குனர் கவுதமிற்காகதான் ரிச்சி படத்தை முதலில் ஒப்புக்கொண்டேன். அவரது தொழில் அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது.

நான் சந்தித்துள்ள நடிகர்களில், மிகவும் அர்ப்பணிப்போடும், எந்த வித பந்தாவும் இல்லாமல் மிக எளிமையாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. சக நடிகராகவும், நண்பராகவும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் மறுபடியும் பணிபுரிய ஆவலோடுள்ளேன்.

இப்படத்தின் எனது கதாபாத்திரத்தின் பெயர் 'மேகா'. ஒரு பத்திரிக்கையாளர் கதாபாத்திரம் இது. தனது கருத்துக்களில் உறுதியாகவும், தான் நம்பும் விஷயங்களுக்கு போராடும் குணமுள்ள கதாபாத்திரம் இது. ரிச்சி படத்தின் கதை சொல்லும் முறை மிகவும் வித்யாசமாக இருக்கும்.

இது ஒரு புது வித சினிமாவாக நிச்சயம் இருக்கும். டிசம்பர் 8ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இப்படத்தை மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன் என கூறினார்.

 


Post your comment





Related News
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்
படம் பிளாப் ஆனால் என் நம்பரை டெலீட் செய்துவிடுவார்கள்: தமிழ் இயக்குனர்கள் பற்றி நிவின் பாலி
நிவின் பாலியின் ரிச்சி படத்தை வாங்கிய பிரபலம் - குஷியில் ரசிகர்கள்.!
குடும்பத்தில் புதுவரவு.. மகிழ்ச்சியில் பிரேமம் ஹீரோ நிவின் பாலி
அட்லீ செய்த சொதப்பலால் கடுப்பான ஹீரோ- படம் தயாராகுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions