சமூக வலைதளத்தின் மீது நிவின்பாலி பகீர் குற்றச்சாட்டு..!

Bookmark and Share

சமூக வலைதளத்தின் மீது நிவின்பாலி பகீர் குற்றச்சாட்டு..!

கடந்த சில தினங்களுக்கு முன் மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் ஆக்சன் ஹீரோ பிஜூ என்கிற படம் வெளியானது. ஓரளவு வரவேற்புடனும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்தப்படத்தில் நிவின்பாலி முதன்முதலாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளதோடு இயக்குனர் அப்ரிட் ஷைனுடன் இணைந்து இந்தப்படத்தை தயாரித்தும் உள்ளார். இதுவரை வந்த வழக்கமான மாஸ் போலீஸ் படங்கள் போலில்லாமல் இது வேறுவிதமான போலீஸ் படமாக அமைந்திருக்கிறது..

அதாவது ஒரு போலீஸ் அதிகாரியின் அன்றாட செயல்பாடுகளை மட்டுமே அதிரடியாக சித்தரிக்கும் படமாக இது வெளியாகியுள்ளது.ஆனால் அதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத்த தவறியதுடன் அவர்களை ஏமாற்றி விட்டதாகவும் சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் பதிவாகி வந்தன.

இந்த கருத்துக்களை கண்டு அதிர்ந்துபோன நிவின்பாலி, சோஷியல் மீடியா மூலம், குறிப்பாக பேஸ்புக்கில் பதிவிடப்படும் கருத்துக்கள், கமெண்ட்டுகள் மூலம் இந்தப்படத்தை சிதைக்கும் விதமாக சிலர் செயல்பட்டு வருகின்றனர் என குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

குறிப்பாக படம் வெளியாகி மூன்று நாட்கள் வரைக்கும் இதேபோன்ற நிலைமை நீடித்தது என்றும், இப்போது அந்த நிலைமை மாறி, படத்தின் வசூல் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அதிலும் பிரபல இயக்குனர்கள் சத்யன் அந்திகாடு, அன்வர் ரஷீத், வினீத் சீனிவாசன், மார்ட்டின் பரக்கத் ஆகியோர் இந்தப்படத்தை பற்றியும் நிவின்பாலியின் நடிப்பை பற்றியும் சிலாகித்து பாராட்டுகளை தெரிவித்தபின் ரசிகர்களிடம் இன்னும் ஆர்வம் கூடியுள்ளதாகவும் நிவின்பாலி தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் நாளைமுதல் இந்தப்படம் சிங்கப்பூரிலும் ரிலீசாகிறது.


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions