நிவின்பாலி படத்தை பாராட்டிய கேரள அமைச்சர்கள்!

Bookmark and Share

நிவின்பாலி படத்தை பாராட்டிய கேரள அமைச்சர்கள்!

சமீபத்தில் நிவின்பாலி நடிப்பில் ஆக்சன் ஹீரோ பிஜூ என்கிற படம் மலையாளத்தில் வெளியானது. காவல்துறை அதிகாரியின் அன்றாட நடவடிக்கைகளில் மட்டுமே சொல்லும் வித்தியாசமான படமாக இது உருவாக்கி இருப்பதால் பாராட்டுக்கள் பல பக்கம் இருந்தும் குவிகின்றன.

இதனை கேள்விப்பட்ட உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா இந்தப்படத்தை பார்க்க விரும்ப, அவருக்காக சிறப்பு காட்சி திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த அமைச்சர், இதுநாள் வரை போலீசாரை வில்லன்களாகவும், நகைச்சுவை கோமாளிகளாகவும் சித்தரித்து வந்தவர்கள் மத்தியில் ஆக்சன் ஹீரோ பிஜூ இயக்குனர் அவர்களை பற்றி நேர்மையாக சித்தரித்துள்ளார். இதனால் காவல் துறையினரின் மதிப்பு மக்களிடத்தில் இன்னும் உயரும் என பாராட்டியுள்ளார்.

 கேரள அமைச்சர்களிலேயே உள்துறை அமைச்சரான ரமேஷ் சென்னிதலா கொஞ்சம் வித்தியாசமானவர். மற்ற எந்த அமைச்சர்களையும் விட சினிமாவில் அதைக் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். அதனாலேயே சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் அடிக்கடி இவரது முகம் தென்படுவதை பார்க்க முடியும்.

இன்னொரு பக்கம் சினிமாவில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பான, சமூகத்திற்கு தீங்கு தரக்கூடிய கருத்துக்கள் எதுவும் இடம் பெற்றிருக்கின்றனவா என்பதை செக் பண்ணுவதற்காகவும் இவர் அதிக அளவில் படங்களை பார்க்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.. இருந்தாலும் இவரது பாராட்டு ஆக்சன் ஹீரோ பிஜூ படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions