நண்பனின் டைரக்சனில் நடிக்கிறார் நிவின்பாலி..!

Bookmark and Share

நண்பனின் டைரக்சனில் நடிக்கிறார் நிவின்பாலி..!

சமீபத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தை பார்த்த இளைஞர்களை அதில் நடித்த, ஸ்கூல்பையன் கேரக்டர் ஒன்று கவனிக்கும்படி செய்தது.. அதாவது அந்தப்படத்தின் ஆரம்ப காட்சிகளில் நிவின்பாலி பள்ளி மாணவராக படித்துக்கொண்டிருக்கும்போது, அதே பள்ளிக்கு சென்று வரும் அனுபமா பரமேஸ்வரனை லவ் பண்ணுவதற்காக சுற்றி வருவார்.

அவர் மட்டுமா, ஊர்ப்பையன்கள் எல்லோரும் அனுபமா பின்னால் தான் அணிவகுப்பார்கள். ஆனால் அனுபமாவின் அப்பாவின் அனுமதியோடு, ஒரே ஒரு பையன் மட்டும் அனுபமாவின் பாடிகார்டாக கூடவே வந்து செல்வான். அதுமட்டுமல்ல, அனுபமாவை பாலோ பண்ணும் மற்ற பையன்களையும் விரட்டி விடுவான். இது சுமார் பத்து நிமிட காட்சிகளிலேயே முடிந்துவிடும்.

ஆனால் எத்தனை பேர் அவனை கவனித்திருப்பார்கள் என தெரியாது. அந்தப்பையன் பெயர் அல்தாப். அல்போன்ஸ் புத்திரனிடம் உதவி இயக்குனராக கொஞ்சமே கொஞ்ச நாள் மட்டும் வேலைபார்த்தவர்..

அதுமட்டுமல்ல நிவின் பாலியின் நெருங்கிய நண்பரும் கூட. இவர் சொன்ன ஒரு கதை நிவின்பாலிக்கு பிடித்துப்போக, அவரை இயக்குனராக மாற்றி அந்தப்படத்தை தானே தயாரித்து, ஹீரோவாக நடிக்கவும் இருக்கிறாராம். தற்போது தான் நடித்துவரும் 'ஆக்சன் ஹீரோ பைஜூ' படத்தை முடித்ததும் இந்தப்படத்தில் தான் நடிக்க இருக்கிறார் நிவின்பாலி.


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions