லால் ஜோஸ் டைரக்சனில் முழு ஹீரோவாக நடிக்கிறார் நிவின்பாலி..!

Bookmark and Share

லால் ஜோஸ் டைரக்சனில் முழு ஹீரோவாக நடிக்கிறார் நிவின்பாலி..!

மலையாளத்தில் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நிவின் பாலி. இவரது நடிப்பில் இந்த வருட ஆரம்பத்தில் வெளியான 'மிலி', சமீபத்தில் வெளியான 'ஒரு வடக்கன் செல்பி' ஆகிய இரண்டுமே இவரது வெற்றிப்பட எண்ணிக்கையை உயர்த்தியுள்ளன.

தற்போது நிவின் பாலி கைவசம் 'இவிடே', 'பிரேமம்' உட்பட நான்கு படங்களை வைத்துள்ள நிலையில் தான் இயக்குனர் லால்ஜோஸ் படத்தில் நடிக்க மீண்டும் வாய்ப்பு வந்திருக்கிறது.  

கடந்த வருடமே லால்ஜோஸ் இயக்கத்தில் 'விக்ரமாதித்யன்' படத்தில் நடித்து அவரது டைரக்சனில் தனது கணக்கை துவங்கிவிட்டார் நிவின் பாலி. இருந்தாலும் அந்தப்படத்தில் துல்கர் சல்மான், உன்னிமுகுந்தன் என இரண்டு ஹீரோக்கள் இருந்ததால் க்ளைமாக்ஸில் பத்து நிமிடம் மட்டுமே வரும் சிறப்புத்தோற்றத்தில் நிவின் பாலியை நடிக்க வைத்தார் லால்ஜோஸ்.

அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்ததுமே எந்த மறுப்பும் சொல்லாமல் வந்து நடித்துக்கொடுத்த நிவின் பாலியின் மீது லால்ஜோசுக்கு மதிப்பு கூடவே செய்தது. அதன் விளைவுதான் இவர்கள் இருவரின் கூட்டணியில் இப்போது துவங்கவுள்ள இந்த புதிய படம். 

 


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions