அதிக தியேட்டர்களில் நிவின்பாலி நடித்த பிரேமம்!

Bookmark and Share

அதிக தியேட்டர்களில் நிவின்பாலி நடித்த பிரேமம்!

பாபி சிம்ஹாவை ரசிகர்களுக்கு முழு வெளிச்சம் போட்டுக்காட்டிய படம் நேரம். இந்த படத்தில் இருந்துதான் சினிமாவில் அவரது நேரம் ஒர்க்அவுட் ஆனது. மலையாள நடிகர் நிவின் பாலி- நஸ்ரியா நடித்திருந்த அந்த படத்தை அல்போன்ஸ் புத்ரன் இயக்கியிருந்தார்.

பாபி சிம்ஹா வட்டிக்கு பணம் கொடுப்பவராக வில்லன் ரோலில் நடித்தார்.  அப்படம் வெற்றி பெற்றதால் பாபி சிம்ஹாவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.அதைப்பார்த்துதான் அவரை ஜிகர்தண்டா படத்திற்கு வில்லனாக கமிட் பண்ணினார் கார்த்திக் சுப்புராஜ்.

அவரைப்போலவே நஸ்ரியாவும் அந்த படத்திற்கு பிறகு தமிழில் திருமணம் என்னும் நிக்கா, ராஜா ராணி என பல படங்களில் நடித்தார். அப்படி இரண்டு கலைஞர்களுக்கு பெரிய ஓப்பனிங் கொடுத்த நேரம் படத்தின் யூனிட் தற்போது பிரேமம் என்றொரு மலையாள படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது.

அல்போன்ஸ் புத்ரன் இயக்கியுள்ள இந்த படத்திலும் நிவின் பாலிதான் நாயகன். நஸ்ரியாவுக்கு திருமணமாகி விட்டதால் அவர் நடிக்க வேண்டிய ரோலில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். வில்லனாக வேறொரு மலையாள நடிகர் நடித்துளளார்.

மற்றபடி இப்படத்தின் டெக்னீசியன்கள் அனைவருமே நேரம் படத்தில் பணியாற்றியவர்கள்தானாம். பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்றைய தினம் பிரேமம் படம் திரைக்கு வந்திருக்கிறது.

கேரளா மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் பல சென்டர்களில் வெளியாகியிருக்கும் அப்படத்தை மும்பையில் 40 தியேட்டர், டெல்லியில் 75 தியேட்டர்களிலும் வெளியிட்டுள்ளனர்.

ஆக, இதுவரை மலையாள படங்கள் வெளியாகாத அளவுக்கு அதிகப்படியான தியேட்டர்களில் இந்த பிரேமம் படம் வெளியாகியிருப்பதோடு நேற்று முதல்நாளே நல்ல ஓப்பனிங்காக பெரிய வசூலை ஈட்டியுள்ளதாம்.

 


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions