நிவின்பாலிக்கு பிருத்விராஜ் தந்த சர்ப்ரைஸ் கிப்ட்!

Bookmark and Share

நிவின்பாலிக்கு பிருத்விராஜ் தந்த சர்ப்ரைஸ் கிப்ட்!

நிவின்பாலிக்கு நமது தமிழ்ப்பட இயக்குனர்களில் கௌதம் மேனனை ரொம்பவே பிடிக்கும். அவரது படங்களை தவறாது பார்த்துவிடும் நிவின்பாலி,  கௌதம் மேனனை நேரில் சந்தித்தது இல்லை.

போனில் கூட பேசியதும் இல்லை.. நிவின் நடித்து ஹிட்டான ஒரு வடக்கன் செல்பி' படத்தில் கூட, நிவின்பாலி ஒரு இயக்குனராக விரும்புவதாகவும், அதற்காக தமிழ்நாடு சென்று எப்படியாவது கௌதம் மேனனிடம் உதவி உயக்குனராக சேர்ந்துவிடவேண்டும் என்றும் அவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கும். 

அந்தப்படத்திற்கு கதை எழுதிய அவரது நண்பரான வினீத் சீனிவாசனுடன் டிஸ்கஷனில் அந்த இயக்குனராக யார் பெயரை சொல்லலாம் என யோசித்தபோது கௌதம் மேனன் பெயரை பயன்படுத்திக்கொள்ளலாம் என ஐடியா கொடுத்தவரே நிவின்பாலி தானாம்.

அப்படிப்பட்ட கௌதம் மேனன் பக்தரான நிவின்பாலி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இவிடே படத்தில் பிருத்விராஜுடன் இணைந்து நடித்துக்கொண்டிருந்தார். 

அந்த சந்தர்ப்பத்தில், படப்பிடிப்பு இடைவேளைகளின்போது, பிருத்விராஜிடம் கௌதம் மேனன் பற்றி சிலாகித்து பேசி வந்துள்ளார் நிவின்பாலி. ஆனால் பிருத்விராஜும் கௌதம் மேனனும் நல்ல நண்பர்கள் என்பது அவருக்கு தெரியாது.

உடனே சஸ்பென்சாக கௌதம் மேனனுக்கு போன் போட்ட பிருத்விராஜ், அதை நிவின்பாலி கையில் கொடுக்க அப்படியே இன்ப அதிர்ச்சியில் அப்படியே ஷாக்காகி போனாராம் நிவின்பாலி. அந்தவகையில் கௌதம் மேனுனுடன் நிவின்பாலியின் முதல் உரையாடலுக்கு பிள்ளையார் சுழி போட்டுவைத்து பரிசளித்துவிட்டார் பிருத்விராஜ்.

 


Post your comment





Related News
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions