நிவின் பாலியுடன் இணையும் வரலட்சுமி

Bookmark and Share

நிவின் பாலியுடன் இணையும் வரலட்சுமி

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் நிவின் பாலி. இவர் தமிழில் ‘நேரம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு தமிழில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. மலையாளத்தில் இவர் சமீபத்தில் நடித்த ‘பிரேமம்’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. மலையாள படம் என்றாலும், தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து, நிவின் பாலி தமிழ் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், பிரபல இயக்குனர் ராஜீவ் மேனனிடம் அசோசியேட் இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நிவின் பாலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் கன்னடத்தில் பிரபலமான ‘உள்ளிடவாரு கண்டன்டே’ என்ற படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வரலட்சுமி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படம் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அந்த வரிசையில் தற்போது நிவின் பாலியுடன் இந்த படமும் பெரிய வெற்றியைத் தேடித் தரும் என நம்பப்படுகிறது.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions