இயக்குனர் லிங்குசாமி குடும்பம் பெயரில் ஒரு படம்

Bookmark and Share

இயக்குனர் லிங்குசாமி குடும்பம் பெயரில் ஒரு படம்

ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபு ராஜா, மற்றும் ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘திருப்பதிசாமி குடும்பம். இந்தப் படத்தில் ஜே.கே., ஜாகீன் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஜெயன் அறிமுகமாகிறார். மற்றும் தேவதர்ஷினி, லஷ்மி ஐஸ்வர்யா, மயில், முத்துராமன், கே.அமீர், சிசர்மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில் “ஒரு நடுத்தர குடும்பத் தலைவனான திருப்பதிசாமி கால் டாக்சி டிரைவர். தனது மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த குடும்பத்திற்கு ஒரு சின்ன தடங்கல் ஏற்படுகிறது.

அப்போது திருப்பதிசாமியின் பிள்ளைகளுக்கு நடக்கும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று அந்த சந்தோஷக் குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதுதான் கதை. மேலும் இப்படத்தின் தலைப்பு இயக்குனர் லிங்குசாமியின் குடும்ப பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது முதல் படமான ஆனந்தம் படத்தில் தனது திருப்பதிசாமி குடும்பம் பற்றி சொல்லி இருப்பார் லிங்குசாமி .அதுமட்டுமில்லாமல் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு கூட திருப்பதி ப்ரொதர்ஸ் என்று பெயர் இருக்கும்


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions