கல்யாண் ராமுடன் குத்தாட்டம் போடும் நோரா பாடெஹி

Bookmark and Share

கல்யாண் ராமுடன் குத்தாட்டம் போடும் நோரா பாடெஹி

மாடலாக இருந்து நடிகையாக மாறிய நோரா பாடெஹி, ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த டெம்பர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களைக் கிறங்கடித்தவர்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளிவந்த டெம்பர் படத்தில் இடம் பெற்ற ஜூனியர் என்.டி.ஆர் - நோரா பாடெஹி பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது நோரா பாடெஹி டோலிவுட்டில்  குத்தாட்ட நடிகையாக பிரபலமடைந்து வருகின்றார்.

டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா கிக் 2 படத்திற்கு பின்னர் நடித்து வரும் பெங்கால் டைகர் படத்தில் நோரா பாடெஹி ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளார்.

இயக்குநர் சம்பத் நந்தி இப்படத்தை இயக்கி வருகின்றார். அதே போல் இயக்குநர் மல்லிகார்ஜுன் இயக்கத்தில் நடிகர் கல்யாண் ராம் நடித்து வரும் ஷேர் படத்தில் நோரா பாடெஹி ஒரு பாடலுக்கு நடனமாட சம்மதம் தெரிவித்துள்ளாராம். இசையமைப்பாளர் தமன், கல்யாண் ராமுடன் நோரா பாடெஹி குத்தாட்டம் போடும் இப்பாடலை அதிரடி இசையுடன் உருவாகியுள்ளாராம். 


Post your comment





Related News
ஆச்சி மனோரமா இடத்தை பிடிப்பதே எனது லட்சியம் - பிரபல நடிகை பேச்சு.!
ஆச்சி மனோராமா இறந்ததற்கு அந்த கும்பல் காரணமா?
'ஆச்சி' நம்மை விட்டுப் போயி அதற்குள் ஒரு வருஷமாச்சு!
பாலச்சந்தர், மனோரமாவுக்கு மரியாதை செய்யும் சென்னை திரைப்பட விழா!
மனோரமாவின் சொந்த வாழ்க்கையில் மறைந்திருந்த சோகம்
மனோரமாவை கடைசியாக முத்தமிட்டு கட்டியணைத்தேன்- கமல்ஹாசன்!
மனோரமா மன வருத்தத்தால் இறந்தாரா? – வெளியான திடுக்கிடும் தகவல்
மனோரமாவுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது: ஜெயலலிதா
ஆச்சியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற திரைபிரபலங்கள்
ஆச்சி மனோரமாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்து ரசிகர்களிடம் சிக்கிய அஜித்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions