படப்பிடிப்பில் தன் மகனுடன் துள்ளி விளையாடிய ஜூனியர் என்.டி.ஆர்.!

Bookmark and Share

படப்பிடிப்பில் தன் மகனுடன் துள்ளி விளையாடிய ஜூனியர் என்.டி.ஆர்.!

தெலுங்கு திரையுலக முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ‘ஜனதா கேரேஜ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போது ‘திடீர்’ விருந்தினர் போல அங்கு ஒருவர் வந்தார். அப்போது படக்குழுவினர் இடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது. பலர் அந்த விருந்தினரை ஆசையுடன் கட்டி தழுவி முத்தமிட்டனர்.

அந்த விருந்தினர் வேறு யாரும் இல்லை. ஜூனியர் என்.டிஆரின் செல்லமகன் ‘அபய்ராம்’ தான்.

படப்பிடிப்பு தளத்தில் ‘அபய்ராம்’ ஓடியாடி விளையாடினான். படப்பிடிப்பு இடைவேளையின் போது மகனுடன் சேர்ந்து ஜூனியர் என்.டி.ஆரும் துள்ளி விளையாடினார்.

தனது மகன் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்த ஜூனியர் என்.டி.ஆர். முதன் முறையாக தனது மகனை படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து வந்ததாகவும், அவனுடன் பொழுதை கழித்த அனுபவத்தையும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions