என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்: தெலுங்கு மாநாட்டில் தீர்மானம்

Bookmark and Share

என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்: தெலுங்கு மாநாட்டில் தீர்மானம்

தெலுங்குதேசம் கட்சியின் 35-வது ஆண்டு மாநாடு திருப்பதி நகரில் நடந்து வருகிறது.

2-ம் நாள் மாநாட்டில் பிரபல நடிகர், கட்சியின் நிறுவனர், மறைந்த முன்னாள் முதல்-மந்திரியுமான என்.டி.ராமராவுக்கு ‘பாரத ரத்னா‘ விருதை மத்திய அரசு வழங்கக்கோரும் தீர்மானம் ஒன்றை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கொண்டு வந்தார். மாநாட்டு மேடையில் அவர் வாசித்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-

கட்சியின் 35-வது மாநாட்டை நினைவுபடுத்தும் விதமாக ஆந்திராவின் புதிய தலைநகராக அமையவிருக்கும் அமராவதி நகரில் 35 மீட்டர் உயரம்(115.5 அடி) கொண்ட என்.டி.ராமராவ் சிலை நிறுவப்படும். அந்த சிலைக்கு தெலுங்கர்களின் பெருமை, சுயமரியாதை என்று பெயர் சூட்டப்படும்.

எதையும் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தை தெலுங்குதேசம் என்.டி.ராமராவிடம் இருந்து மரபுரிமையாக பெற்றது. அவர், இந்த சமூகத்தின் கோவில்.

அவரை மக்கள் கடவுளாக காண்கின்றனர். ஆந்திராவில் புதிய அரசியல் சகாப்தத்தை தொடங்கி வைத்தவர் அவர். தெலுங்கு மக்களின் சுயமரியாதை, பெருமை ஆகியவற்றை பாதுகாத்தவரும் அவர்தான்.

மாநிலத்தில் ஏழை, எளிய மக்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் மிகக் குறைந்த விலையில் உணவு சாப்பிடும் வகையில் அண்ணா (என்.டி. ராமராவ்) உணவகங்கள் விரைவில் தொடங்கப்படும்.

உலகின் தலை சிறந்த நகரமாக அமராவதி உருவாக்கப்படும். அனந்தபுரம், கடப்பா, கர்னூல் ஆகிய நகரங்கள் அமராவதியுடன் மாநில விரைவு வழிச்சாலை மூலம் இணைக்கப்படும். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்க நிலம் தரக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் மக்களை தூண்டிவிடுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions