படம் திரையிடாததால் திரையரங்கத்தை சூறையாடிய என்டிஆர் ரசிகர்கள்

Bookmark and Share

படம் திரையிடாததால் திரையரங்கத்தை சூறையாடிய என்டிஆர் ரசிகர்கள்

ஒரு பெரிய ஸ்டாருடைய படம் திரைக்கு வருகிறதென்றால் அவரது ரசிகர்களுக்கு அதை தீபாவளி போல கொண்டாடிவிடுவார்கள். அதிலும் ஜூனியர் என்டிஆரின் படம் திரைக்கு வந்தே நீண்ட நாட்களாகிவிட்ட நிலையில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான டெம்பர் திரைப்படம் நேற்று வெளியானது.

இதுவரை இல்லாத அளவுக்கு ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் இப்படத்தை மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் பார்க்க காத்துக் கொண்டிருக்கையில், அதிகாலை 5 மணிக்கு ஷோ என்று அறிவித்த திருப்பதியில் ஒரு தியேட்டர், சொன்ன நேரத்தில் படத்தை ஆரம்பிக்காமல் ஒரு மணி நேரம் வரை தாமதப்படுத்தியதால் கடுப்பான ரசிகர்கள் ஆத்திரத்தில் தியேட்டர் மீது கற்களை வீச தொடங்கிவிட்டனர்.

இதனால் தியேட்டர் கண்ணாடிகள் உடைந்து பலத்த சேதம் ஏற்பட்டுவிட்டதாம். உடனே அங்கிருந்த போலீசார்கள் ரசிகர்கள் அனைவரையும் அவர்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

படம் திரையிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பல லட்ச ரூபாய் வரை நஷ்டத்தை ஏற்படுத்திட்டாங்களே ரசிகர்கள் என்று தியேட்டர் உரிமையாளர்கள் புலம்பி தள்ளிவிட்டார்களாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions